உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை நடவடிக்கை: கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டம்

நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை நடவடிக்கை: கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகாரளித்த பேராசிரியை நிகிதா தற்போது திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r3v0dmic&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இங்கு மாணவிகளை தகாத முறையில் நடத்தியது, வருகை பதிவேடு உள்ளிட்ட அலுவல் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது, சக பேராசிரியர்களை தரக்குறைவாக பேசியது, கல்லூரி முதல்வருக்கு கட்டுப்படாதது போன்ற பல்வேறு அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில் நிகிதாவை இடமாற்றம் செய்யுமாறு அவரது துறையின் மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து நிகிதா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மூலம் மதுரையில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடத்திய கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நிகிதா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை உறுதி செய்து அது தொடர்பாக விரிவான அறிக்கையை கல்லூரிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது நிகிதா மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கி நிகிதா ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக அவர் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக மதுரை திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் கல்லுாரிக்கல்வி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Devadoss Vasantharaj
ஜூலை 05, 2025 11:28

Medium


Elango S
ஜூலை 05, 2025 10:07

நெத்தயடி


RADHAKRISHNAN
ஜூலை 04, 2025 20:56

அவனவன் இஷ்ட மியிருக்கு எழுதுகிறார்கள் என்ன நடந்தது என்ன நடவடிக்கை என்பதை பார்க்கவேண்டும் அனைவருமே பெரிய விசாரணை அமைப்பு போல் கருத்து பதிவிடவேண்டியது, அதிக குற்றப்பின்னணியுள்ளவர்கள் போல தெரிகிறது எவனாவது யோக்கியன் உண்டா? தேடிப்பிடிக்கவேண்டும் சமுதாயமே கழுசடை சமுதாயம் அதில் இருந்து வந்த துறைகள்தான் எல்லாத்துறைகளும் பிறகு எப்படி யோக்கியர்களைப்பார்க்கமுடியும், முதலில் ஒரு நல்ல அரசாங்கத்தை கொண்டு வர முடியுமா? இல்லை காமராஜர் வந்தால் நீங்கள் காசுவாங்காமல் ஓட்டுப் போடுவீர்களா?


D.Ambujavalli
ஜூலை 04, 2025 16:58

2011 குற்றத்துக்கும், லட்சக்கணக்கில் ஏமாற்றியதற்கும், 14 வருஷம் கழித்து நடவடிக்கை 9, 5 என்றும் சொல்கிறார்கள் பவுனும், 2500 ரூபாயும் கனவு போனதாகக் கொடுத்த புகாருக்கு FIR கூட இல்லாமல் இரண்டே நாளில் மரண தண்டனை இதுதான் திராவிடமாடல் justice போலிருக்கிறது


Muralidharan S
ஜூலை 04, 2025 16:30

திண்டுக்கல் லியோனி, பொன்முடி, மகேஷ்... கல்வி துறை... ம்ம்ம்ம்ம்...


Muralidharan S
ஜூலை 04, 2025 16:15

இரண்டு திராவிஷ கட்சிகளால் நாசமாகிப்போன , மோசமாகிப்போன தலைமுறை மக்கள் மனநிலை.. அழிவை நோக்கி தமிழகமும், தமிழக மக்கள் அதர்மமே வெல்லும், அநியாயம் ஜெயிக்கும் என்ற மனோபாவமும்.. நல்ல இருந்த நாடும் திராவிஷத்தால் நாசமாகிப்போன நாடும் என்று படமே எடுக்கலாம்..


vadivelu
ஜூலை 04, 2025 16:06

இது என்ன ரொம்ப வெளியே தெரியாமல் இருந்த ஆம்னி போல் இருக்கே.


K V Ramadoss
ஜூலை 04, 2025 14:10

2011-ம் ஆண்டே ரூ.16 லக்ஷம் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்ட நிலையில் எப்படி இத்தனை நாட்கள், 2025 வரை திண்டுக்கல் மகளிர் அரசு கல்லூரியில தாவரவியல் துறை பேராசியராக நிகிதா இருந்தார்? விசாரணை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? இவர் பின்னணியில் யார் அந்த சார்? FIR இல்லாமல் கொலை செய்ய தூண்டியது அவர்தானோ ?


தமிழன்
ஜூலை 04, 2025 14:06

அடுத்த 50 ஆண்டுகளுக்கு தடை செய்தால் மட்டுமே முடியும்.. அதுவரை வாய்ப்பு இல்லை


Marai Nayagan
ஜூலை 04, 2025 13:56

அராஜக டாஸ்மாக் திமுக ஒழிய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை