UPDATED : நவ 26, 2024 04:49 PM | ADDED : நவ 26, 2024 10:42 AM
சென்னை: 'வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.,27) புயலாக மாறும். புயலுக்கு பெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 570 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 770 கி.மீ., தொலைவிலும் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=joine506&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.,27)
புயலாக மாறும். புயலுக்கு பெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் தமிழக-இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. செங்கல்பட்டு காஞ்சிபுரம் , விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, கடலூர், காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இன்றும், நாளையும்(நவ.27) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.தஞ்சாவூரில் இன்று(26ம் தேதி) மதியம் 2:30 மணி வரையிலான மழை பதிவு அளவு மில்லி.மீட்டரில்:தஞ்சாவூர் - 16.50வல்லம் - 8.00குருங்குளம் - 15.80திருவையாறு - 10.00பூதலுார் - 12.40திருக்காட்டுப்பள்ளி - 7.60கல்லணை - 10.00ஒரத்தநாடு - 24.50நெய்வாசல் தென்பாதி - 17.20வெட்டிக்காடு - 29.20கும்பகோணம் - 5.80பாபநாசம் - 10.00அய்யம்பேட்டை - 23.00திருவிடைமருதுார் - 5.60மஞ்சலாறு - 5.40அணைக்கரை - 7.00பட்டுக்கோட்டை - 19.00அதிராம்பட்டினம் - 21.40ஈச்சன்விடுதி - 26.20மதுக்கூர் - 14.00பேராவூரணி - 20.00சென்னை மக்களே உஷார்!சென்னையில் இன்று காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழை மில்லி மீட்டரில்மணலி -132.9 கத்திவாக்கம்- 110.1 மீனம்பாக்கம்- 75.6 பெருங்குடி -71.1 ஆலந்தூர் -66.3 அடையார்- 65.1 திருவொற்றியூர் -64.8 சோழிங்கநல்லூர் -63.8 புழல்- 63.6 மாதவரம் -62.8 ஐஸ் ஹவுஸ்- 57.6 கொளத்தூர் -57 ராயபுரம் -56.4 டி.வி.கே., நகர் -56.4 கோடம்பாக்கம்- 51.4 தேனாம்பேட்டை -49.8 அண்ணாநகர்- 47.7 அம்பத்தூர் -45.6 வானகரம்- 41.4 வளசரவாக்கம்- 39.3 மதுரவாயல் -39 முகலிவாக்கம் -33.6