உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி துணை முதல்வர் இன்றோ, நாளையோ அறிவிப்பு

உதயநிதி துணை முதல்வர் இன்றோ, நாளையோ அறிவிப்பு

காஞ்சிபுரம்,:'அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக நாளைக்கே அறிவித்து விடுவர்' என, அமைச்சர் அன்பரசன் நேற்று காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.தி.மு.க.,வின் 75வது ஆண்டு பவள விழாவையொட்டி, தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம், வரும் 28ம் தேதி மாலை, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அருகே நடக்க உள்ளது.இதற்கான பாதுகாப்பு, வாகன பார்க்கிங், பந்தல் அமைப்பது போன்ற முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு நடத்த, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பச்சையப்பன் கல்லுாரி அருகே கூட்டம் நடக்கும் இடத்திற்கு நேற்று வந்திருந்தார். விழா நடக்கும் இடத்தை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்ட பின் அளித்த பேட்டி:தி.மு.க., பவள விழாவையொட்டி நடக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவ்வளவு பேரும் கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காஞ்சியில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் 50,000 பேருக்கு மேல் பங்கேற்க உள்ளனர்.விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விரைவில் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். ஒரு வாரத்திற்குள் அவர் துணை முதல்வராக்கப்படுவார். ஏன், இன்றோ, நாளையோடு கூட அறிவிப்பு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
செப் 20, 2024 20:26

இன்றோ, நாளையோ, நாளை மறுநாளிலிருந்தோ தமிழகம் அழிவுப்பாதையில் செல்லத்துவங்கும். சினிமாவில் கூத்தடித்தவனுக்கெல்லாம் துணை முதல்வர் பதவி... ஓட்டைவாய், உளறுவாயனுக்கெல்லாம் துணை முதல்வர் பதவி


angbu ganesh
செப் 20, 2024 09:52

அண்ணா ஆரம்பிச்ச கட்சி இதுல இவனுங்களுக்கு என்ன உரிமை இருக்கு யார் வேணும்னா முதல்வர் ஆகலாமா, இவர் பெரிசு ஆனதையே எங்களா ஜீரணிக்க முடியலை இதுல ஒரு நாலு படம் நடிச்சு சூப்பர் ஸ்டார் ஆயிட்டார் என்ன தகுதி இருக்கு ஒரு கவுன்சிலர் பதவிக்கே சில பல தகுதிகள் வேணும் இப்போ இருக்கிறவங்களுக்கு அது கெடயாது சந்தானத்தை அழிக்க வந்தவனுக்கு துணை முதலவர் பதவி ஏன் அவரையே முதல்வர் ஆக்கிடுங்க தமிழ் மக்கள் தான் இளிச்ச வாயனுங்கள் ஆச்சேய்


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 20, 2024 08:53

இது ஒருவகையான அரசியல். தன் மகனை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற குடும்பத்தாரின் ஆசையை நேரடியாக அமல்படுத்தாமல், தங்களுக்கு ஆசையில்லை, தொண்டர்களின் வேண்டுகோளை மதிக்கிறோம் என்ற பம்மாத்து காட்டி, தொண்டர்களின் விருப்பத்திற்காக செய்வது போல, முதலில் தொண்டர்களை கூவச்செய்கிறார்கள். இப்படித்தான் இளைஞர் அணிப்பதவிக்கும், பின் சேப்பாக்கம் சட்ட மன்ற வேட்பாளர் பதவிக்கும் நடந்தது. பின்னர் அமைச்சர் மகேஷ் மூலம் தீர்மானமாக அமைச்சராக்கினார். இப்போது பலரையும் பேச வைத்து மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி து மு ஆக்கப்போகிறார்கள். மக்கள் முட்டாள்கள் என்பதுபோல, இதுவரை உடன் பிறப்புகள் யாருமே மு நல்ல ஆரோக்கியத்துடன் வேஷ்டி கட்ட முடியாமல் தமிழ் கலாச்சாரப்படி பேண்ட் சூட்டு போட்டுக்கொண்டு சுற்றுப்பயணம் வந்துகொண்டிருக்கும்போது து மு பதவிக்கு அவசியம் என்ன என்று கேட்கவில்லை. கேட்கமாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை