உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வராகும் உதயநிதி... 3 அமைச்சர்களின் பதவி பறிப்பு; தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்

துணை முதல்வராகும் உதயநிதி... 3 அமைச்சர்களின் பதவி பறிப்பு; தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்

சென்னை: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் மாற்றம் செய்ய கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.கடந்த சில நாட்களாகவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, வலுத்திருக்கிறது, பழுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான பரிந்துரையை தமிழக அரசு, கவர்னர் ரவிக்கு அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அந்தக் கோரிக்கையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதன்மூலம், அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல, அமைச்சர்கள், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புதிய அமைச்சர்களாக, செந்தில் பாலாஜி, நாசர் மற்றும் செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அதேபோல, உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.அமைச்சரவையில் புதிதாக இடம்பிடித்தவர்கள் நாளை பிற்பகல் 3:30 மணிக்கு பதவியேற்க இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.'

அரசு கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம்

தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன், அரசு கொறடாவாக நியமித்து உத்தரவு பிறப்பிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

venugopal s
செப் 29, 2024 17:34

இது தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவு.அதனால் இது தமிழக மக்களின் முடிவு. விருப்பப்பட்டால் ஏற்றுக் கொள்ளலாம், இல்லாவிட்டால் புலம்பிக் கொண்டே இருக்கலாம்! மற்றவர்களைப் போல் தமிழகத்தை விட்டு ஓடிப் போகச் சொல்ல மாட்டோம்!


theruvasagan
செப் 29, 2024 20:11

நீட் தேர்வு மும்மொழிக் கொள்கை தேசிய கல்விக் கொள்கை இவை அனைத்தும் இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவு. அதாவது மக்களின் விருப்பம். அப்ப அதை ஏற்கணுமா வேண்டாமா.


Ramachandran Saragothaman
செப் 29, 2024 09:54

தமிழ் நாடு இனி மன்னராட்சி


vbs manian
செப் 29, 2024 09:52

அம்பேத்கர் என்ன நினைப்பார்.


vbs manian
செப் 29, 2024 09:51

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.


krishna
செப் 29, 2024 11:57

GURU SONNA PAKKAM 21 DESIGN GOPALAPURAM KOTHADIMAI OOPIS NATTUME IPPADI SOLLA MUDIYUM.


vbs manian
செப் 29, 2024 09:42

ஜனநாயகமே உன் விலை என்ன.


vbs manian
செப் 29, 2024 09:41

புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது.


Shekar
செப் 29, 2024 09:32

ஆஹா...செந்தமிழ்நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே... already tolded by பாரதியார், இதைத்தான் அவர் அன்றே கணித்து மகிழ்ந்து பாடியுள்ளார். முதல்வர்.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், துணை முதல்வர்.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி, தலைவா இனி இளைய முதல்வர் பதவியை உருவாக்கி அதை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி அவர்களுக்கு கொடுத்தால் இந்த தமிழர்கள் பிறவிப்பயனை அடைவார்கள்


gvr
செப் 29, 2024 08:31

Useless tamil voters will only vote for this corrupt dynasty.


rao
செப் 29, 2024 10:38

Don't call them useless voters ,they are corrupt both mentally , physically and morally.


Just imagine
செப் 29, 2024 08:28

பழுத்த பழமே வருக ..... அடுத்த மன்னராக முடிசூட பழக வருக ...


எஸ் எஸ்
செப் 29, 2024 08:20

உதயநிதி பிறந்த 1977லேயே லிப்ஸ்டிக் ஐயா ஆக்ட்டிவ் ஆன திமுக MLA ஆக இருந்தார். இலவு காத்த கிளி!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை