உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை காலத்தில் பயன்படுத்த வாக்கி - டாக்கி : துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்

மழை காலத்தில் பயன்படுத்த வாக்கி - டாக்கி : துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மழை காலத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் அளவில் பயன்படுத்த, 'வாக்கி - டாக்கி' வழங்கு வது குறித்து பரிசீலிக்க வேண்டும்,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வடகிழக்கு பருவ மழையையொட்டி எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. இதில், உதயநிதி பேசியதாவது:வடகிழக்கு பருவமழை, இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளது. அதனால், மழை நீர் வடிகால் பணி, மின் வாரிய கேபிள்கள் அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி என, ஏற்கனவே செய்து வரும் பணிகளை, விரைவாக முடிக்க வேண்டும்.மழை காலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளின் பட்டியல், வார்டு வாரியாக உள்ளன. அதனால், மோட்டார் பம்பு கள், படகுகள் போன்றவற்றை, ஒரே இடத்தில் வைக்காமல், அந்தந்த வார்டுகளுக்கு இப்போதே வழங்கி, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.மழைநீர் அதிகம் தேங்கும் இடம் அருகிலேயே, சமையற்கூடங்கள் அமைத்தால், மக்களுக்கு உரிய நேரத்தில், நம்மால் உணவு வழங்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்க, கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் அளவுக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 1,000 பால் பாக்கெட்டுகள், ரொட்டி பாக்கெட்டுகள் என்ற அளவில் வழங்க, தயாராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு மழையின் போது, பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மொபைல் போன்களும் செயல்படவில்லை. நிவாரண பணிகளை செய்ய, ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் அளவில் பயன்படுத்த, 'வாக்கி - டாக்கி'கள் வழங்கலாமா என்பது குறித்து ஆராய வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சார பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும். மழைநீர் சூழ்ந்துள்ள ஒட்டுமொத்த பகுதியும், இருளில் மூழ்கும் போது, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டாலும், ஜெனரேட்டர் வழியாக பிரதான சாலைகளிலும், இணைப்பு சாலைகளிலும், விளக்குகளை எரிய விடும்படி, பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சிதிலமடைந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், பழமையான சுனாமி குடியிருப்புகள் போன்றவற்றில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

NACHI
அக் 06, 2024 16:59

இந்த வருடம் மழை இல்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 06, 2024 13:35

அது சரி ..... வாக்கி டாக்கிக்கு டுமீல் ல என்ன துணை தத்தியாரே ????


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 06, 2024 13:29

வாக்கி டாக்கியை சார்ஜ் போட கரன்ட்டு அப்பப்போவாச்சும் வரணுமே கோவாலு ????


Lion Drsekar
அக் 06, 2024 10:50

தன்னிடம் இருக்கும் கைப்பேசியையே இவர்கள் தங்கள் செயலாளர்கள்தான் பயன்படுத்துகிறார்கள், எங்காவது ஒரு பாமர மக்கள் மேல்நிலையில் இருக்கும் மக்கள் பிரநிதிகளையோ அல்லது உயர் அதிகரிகளையோ தொடர்பு கொள்ள முடியுமா ? மேலும் இந்த வாக்கி டாக்கி என்ன விலை, எத்தினை லட்சம் பணம் செலவு, இவைகளை முன்பே வாங்கியிருப்பார்கள் அவைகளை தூசி தட்டி எடுத்து பயன்படுத்த அறிவுறுத்தலாம் , காவலத்தரும் மற்றும் தீயணைப்புத் துறைகள் பயன்படுத்தி வருகிறார்கள், மக்கள் பிரநிதிகள் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினால் போதும், கூடுமானவரை மக்கள் வரிப்பணத்தை வீண் செலவு செய்யாமல் பாதிக்கப்படும் ஏழைஎளியவர்ளுக்கு ஏதாவது உதவுவதற்கு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் வந்தே மாதரம்


ASIATIC RAMESH
அக் 06, 2024 10:35

ஹாம் ரேடியோ லைசன்ஸ் உள்ள சமூக சேவகர்கள் இந்த உதவியை செய்ய அனைத்து நகரங்கிலும் தயாராக உள்ளனர். அவர்களது வாக்கி டாக்கிகளில் பல்வேறு வசதிகள் உள்ளது. ஏற்கனவே அரசு அலுவலர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கிகளே பராமரிப்பின்றி உள்ளது. எனவே ஹாம் ரேடியோ லைசன்ஸ் உள்ளவர்களை பயன்படுத்தலாம். 1993ம் வருடம் முதல் நாங்கள் எங்கள் பகுதியில் எங்கள் சங்கத்தின் மூலம் இந்த சேவையை செய்து வருகிறோம்.


rasaa
அக் 06, 2024 10:35

நல்ல பொருளாக வாங்குங்கள். ஈரானில் நடந்ததுபோல் ஆகிவிட போகின்றது.


V RAMASWAMY
அக் 06, 2024 09:26

என்ன மாறுதல் முன்னேற்றம் ஏற்படும் என்று நினைக்கிறார் புது துணை முதல்வர்? மொபைல் போன் எல்லோரிடமும் இருக்கிறது, அதைவிடவா வாக்கி டாக்கி செயல்படப்போகிறது? ஏதாவது புது சுரண்டல் திட்டம் இருக்காது என நம்புவோம்.


Sundara Varadhan
அக் 06, 2024 08:36

Electrical safety must be ensured to avoid electrocution during rainy days, especially in water logged areas. Need to be careful while giving temporary connections.


GMM
அக் 06, 2024 08:30

ஆளும் கட்சி, எதிர்கட்சி கவுன்சிலர் , சட்ட மன்ற உறுப்பினருக்கு வாக்கி - டாக்கி வழங்கும் போது ஆளும் கட்சியின் தவறுகள் எதிர்க்கட்சிக்கு உடனக்குடன் சென்று விடும் பரவாயில்லையா? மாநிலம், மழைகாலத்தில் வாழும் நிலையில் இல்லை என்பதை உறுதி படுத்துகிறது திராவிட துணை மாடல்.


Kasimani Baskaran
அக் 06, 2024 07:07

செல்ல போன் டவர் வேலை செய்யாதா?


சமீபத்திய செய்தி