உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 21 கட்சிகள் குரல் கொடுத்தும் முதல்வரிடம் பதில் இல்லையே: 12 நாள் போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை

21 கட்சிகள் குரல் கொடுத்தும் முதல்வரிடம் பதில் இல்லையே: 12 நாள் போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை

மதுரை: தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்யக்கோரி 12 நாட்கள் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்காக தி.மு.க., கூட்டணி உட்பட 21 கட்சிகள் குரல் கொடுத்தும் முதல்வர் ஸ்டாலினிடம் பதில் இல்லையே என வேதனையில் உள்ளனர்.தமிழகத்தில் 2012ல் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களால் 6 முதல் பிளஸ் 2 வரை கணினி, ஓவியம், உடற்கல்வி என 30 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடி வெறுத்த பலர், வேறு பணிக்குச் சென்றுவிட்ட நிலையில் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டும் உள்ளனர்.இந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக 2016, 2021 சட்டசபை தேர்தல்களின்போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. 2021ல் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர் போராட்டம் நடத்தியும் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

மனஉளைச்சலில் ஆசிரியர்கள்

கடைசியாக ஜூலை 8ல் சென்னையில் போராட்டம் துவங்கி 12 நாட்கள் நடத்தினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகினர். அ.தி.மு.க., பா.ம.க. உட்பட பல்வேறு கட்சிகளுடன் தி.மு.க. ,கூட்டணியில் உள்ள இ.கம்யூ., மனிதநேய மக்கள் கட்சி உட்பட 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அமைச்சர் நிலையில் கூட போராட்ட ஆசிரியர்களிடம் பேச்சு நடத்த வராததால் மனஉளைச்சலில் உள்ளனர்.தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் தர்மபுரியில் நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் 100 நாட்களில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தார். தற்போது ஆயிரத்து 540 நாட்களை கடந்துவிட்டது. ஆட்சி காலம் நிறைவடைய இன்னும் 280 நாட்கள் தான் உள்ளன.வாழ்க்கை நடத்த முடியாத அளவு குறைந்த சம்பளத்தில் 13 ஆண்டுகள் கடந்து விட்டன. மே சம்பளம் இல்லை. காப்பீடு, மரணம் அடைந்தால் குடும்ப நிவாரணம் இல்லை. கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் கூட ரூ.10 லட்சம் நிவாரணம் கிடைக்கிறது. ஆனால் 30 லட்சம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் வீதியில் நின்று போராட வேண்டியுள்ளது. கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்ற கேட்கிறோம். நிதிப் பற்றாக்குறை எனக் கூறி நீதியை மறுக்கிறது மாநில அரசு. ஓட்டுக்களை பெற இலவச திட்டங்களுக்கு ரூ. பல கோடிகள் ஒதுக்கும் அரசுக்கு, கல்வி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்க மனமில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Padmasridharan
ஜூலை 22, 2025 08:37

Employment office மூலமாக seniority date பிரகாரம் வராமல் பணம் கொடுத்து சேர்ந்தவர்களும் உண்டு. அங்கு additional/renewal க்கு சென்றால் refistration காணமால் போய்விட்டதென்று சொல்லி புதிதாக register செய்கிறார்கள். மரியாதையுடன் மரியாதையில்லாமல் பேசி திருப்பி அனுப்பி வைக்கின்றனர். . இவ்வாறு இருப்பது அவர்களுக்கு தெரிந்தே இதற்கு இவ்வாறு செய்கின்றனரோ என்னமோ சாமி .


ராமகிருஷ்ணன்
ஜூலை 21, 2025 20:58

நீங்க எப்படிப்பட்ட டகால்டி போராட்டம் செய்தாலும் அரசு மதிக்காது, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாது.


Rajarajan
ஜூலை 21, 2025 12:32

இந்த கருத்துக்களை நிர்வாக ரீதியில் மற்றும் நடைமுறையில் மட்டும் பார்க்கவும். இதுபோன்ற ஓவியம், விளையாட்டு, தையல், தறி, கைத்தொழில் போன்றவை, தற்போதைய சூழலில் அரசுப்பள்ளிகளில் தேவையற்ற வேலை. இதில் எந்த மாணவரும் சாதிப்பதில்லை. நான் உட்பட. இது வோட்டு அரசியலுக்காக தேர்ந்தெடுக்கப்படும் வீணான பதவிகள். இதனால், அரசுக்கு நிதி மற்றும் நிர்வாக தலைவலி. யாரேனும், இந்த பிரிவுகளில் கற்க வேண்டுமெனில், எவ்வளவோ தனியார் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அதில் சேர்ந்து பயில எந்த தடையும் இல்லை. மேலும், தரமும் சிறந்ததாக இருக்கும்.


Kudandhaiyaar
ஜூலை 21, 2025 11:13

அரசு ஊழியர்கள் திமுக அடிமைகள். எப்படி இருந்தாலும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கிவிடுவார் முதல்வர். போராட சொன்னதே அவர்கள் தானே. உடனே செய்தால் கண்டங்களுக்கு ஆளாக ஏறும் இன்னும் 10 நாள் ஆனவுடன் அறிவிப்பார். இவர்களும் கை குலுக்கி விரலில் மை ஏந்தி திமுக அடிமையாய் வலம் வருவர்


Keshavan.J
ஜூலை 21, 2025 10:50

போராட்டம் முடிந்தவுடன் வரும் எலெக்ஷனில் எல்லோரும் பொய் உங்கள் ஓட்டுக்களை ஜாதி ,மதம் பார்த்து மீண்டும் தீமூகாவுக்கு வோட்டு போடுங்கள் மீண்டும் ரோட்டில் வந்து போராடுங்கள்.


m.arunachalam
ஜூலை 21, 2025 10:28

இங்கு வடமாநில தொழிலாளர்கள் எல்லா இடத்திலும் நிறைந்து உள்ளனர். நாம் அர்த்தமில்லாமல் போராடிக்கொண்டிருக்கிறோம் . 21 கட்சிகள் பணம் தரப்போவதில்லை . உங்கள் வாக்குக்காக குரல் கொடுத்தால் போதும் . நிதி நிலைமை என்ன என்பது ஆட்சியில் உள்ளவர்களுக்கு தான் தெரியும். தெளிதல் நலம் .


Sekar Times
ஜூலை 21, 2025 08:41

மக்கள் ஆதரவு இல்லை ஆசிரியர் போராட்டம் வீண்


raja
ஜூலை 21, 2025 08:32

திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்டவர்களுக்கு.. இதுதாண்டா திராவிட மாடல் என்று முதல்வர் விளக்கம்...


ஆதிநாராயணன்
ஜூலை 21, 2025 08:07

சதுரங்க வேட்டை போல‌ மக்களின் ஆசையை தூண்டி பொய்யான வாக்குறுதியால் அமைந்த அரசிடம் உங்களுக்கு ஏமாற்றத்தை தவிர வேறு என்ன கிடைக்கும்


S.V.Srinivasan
ஜூலை 21, 2025 08:01

முதல்வர் சந்திர மண்டலம் போயிருக்காருங்க. வந்தோன்ன பதில் சொல்வாரு.