உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சலுகையும், அவகாசமும் அளித்தும் கூட்டுறவு கடன் வசூலாகவில்லை ரூ.250 கோடி மட்டும் கிடைத்தது

சலுகையும், அவகாசமும் அளித்தும் கூட்டுறவு கடன் வசூலாகவில்லை ரூ.250 கோடி மட்டும் கிடைத்தது

சென்னை : கூட்டுறவு வங்கிகளில் நீண்டகால நிலுவை கடன் வசூலிக்கும் திட்டத்திற்கு, இம்மாதம் வரை அவகாசத்தை நீட்டித்தும், 920 கோடி ரூபாய் வசூலாக வேண்டியதில், 250 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகிஉள்ளது. தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பண்ணை சாரா பிரிவில், பல ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கிய சிலர், அசல், வட்டியை செலுத்தாமல் உள்ளனர். அவர்கள், கடன் வாங்க வழங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கிகளில் உள்ளன. வட்டி, அபராத வட்டி, தாமத கட்டணம் போன்றவற்றுடன் சேர்த்து, அசலை அடைக்க மொத்தம், 16 சதவீதம் வட்டி செலுத்த வேண்டியிருந்தது. எனவே, நீண்ட கால நிலுவை கடனை வசூலிக்க, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை, 2023ல் கூட்டுறவு துறை துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், அபராத வட்டி உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்பட்டு, அசலுடன், 9 சதவீத வட்டி மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம், 2.10 லட்சம் பேரிடம் இருந்து, 910 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான அவகாசம் இந்தாண்டு மார்ச்சில் முடிவடைந்தது. பின், வாடிக்கையாளர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, அவகாசம் செப்., 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிவடைந்த நிலையில், இதுவரை, 70,000 பேரிடம் இருந்து, 250 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூலாகியுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவகாசம் அளித்தும் எதிர்பார்த்தபடி, நிலுவை கடன் தொகை வசூலாகவில்லை. இனி, அவகாசம் நீட்டிக்க அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Gajageswari
செப் 30, 2025 15:09

தமிழகத்தில் கடன் திருப்பி செலுத்த வேண்டும் என்ற மனநிலை இல்லை


rajasekar
செப் 30, 2025 14:50

வாங்கியதே திரும்ப கட்டவேண்டாம் எண்ணம் மாடல் கொடுத்தது தானே.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 30, 2025 11:47

2026 தேர்தலில் திமுக கடன் தொகை முழுவதும் தள்ளுபடி என்ற வாக்குறுதியை வழங்கும் என்று கடன் வாங்கியவர்கள் நம்பிக்கை உடன் இருக்கலாம் அல்லவா.


சாமானியன்
செப் 30, 2025 10:42

அரசியல்வாதிகள் பொறுப்போடு பேச வேண்டும். அவர்களே மக்களிடம் "நீங்கள் வட்டி கட்ட தேவையில்லை" என்பது போல பேசினால் எப்படி வட்டி வசூலாகும்? அசல் கூட வசூல் ஆகாது.


அப்பாவி
செப் 30, 2025 10:07

என்ன செய்யறது? இவிங்களுக்குன்னு ஒரு வாராக்கடன் வங்கி ஆரமிக்க வேண்டியதுதான்.


mdg mdg
செப் 30, 2025 09:57

2021 ஆம் ஆண்டு விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு நல்ல சிந்தனை உள்ள அரசியல்வாதிகளால் அறிவிக்கப்படவில்லை. கடந்த கால அறிவிப்பு முழுவதும் தவணை தவறிய கடனுக்கு வட்டி தள்ளுபடியும், நடப்பில் உள்ள கடன் தள்ளுபடியும் என்ற அறிவிப்பு இருந்தது. ஜெயலலிதா,கருணாநிதி இரு முதல்வர்களும் பட்டம் படிக்கவில்லை என்றாலும் என்ன செய்தால் என்ன நடக்கும் என்ற சிந்தனையுடன் ஆட்சி செய்தார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 30, 2025 08:36

கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ..... இவை எல்லாமே அரசியல்வியாதிகள் மற்றும் அவர்களது அடிப்பொடிகள் ஆட்டயப்போடவே உருவாக்கப்பட்டவை ....


KRISHNAN R
செப் 30, 2025 07:35

வட்டி தள்ளுபடி என்ற..... குற்றம் பல ஆண்டு முன்..முதன் முதலாக அமல் செய்த பின்னர்., தொடர்கதைகள்... தான்..... இனி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை