உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதுரகிரியில் மருத்துவ மையம் அமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

சதுரகிரியில் மருத்துவ மையம் அமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரியில் பக்தர்கள் தினமும் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அடிவாரத்திலும், கோயிலிலும் மருத்துவ உதவி மையம், விபத்து மீட்பு குழு அமைக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது பக்தர்கள் தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளை கடக்க பாலங்கள் அமைக்கவும், செங்குத்து பாதைகளில் கைப்பிடி கம்பிகள் அமைக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவுகிறது.மலை ஏறும் போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ மையங்கள் இல்லை. நேற்று முன்தினம் தரிசனம் செய்து விட்டு அடிவாரம் திரும்பிய இருவர் தடுமாறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை சம்பவ இடத்திலிருந்து அடிவாரம் கொண்டு வருவதில் மிகுந்த சிரமமான நிலை ஏற்பட்டது.தாணிப்பாறை மலை அடிவாரத்திலும், கோயிலிலும் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கவும், அனைத்து நாட்களிலும் விபத்து மீட்பு குழுக்கள் இருப்பதை உறுதி செய்யவும் மதுரை, விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகங்கள், அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sridhar
ஏப் 15, 2025 13:56

மலையில சின்னதா ஒரு சர்ச் கட்டுங்க , பெரியதா ஒரு ஆஸ்பத்திரி வரும்.


sivakumar Thappali Krishnamoorthy
ஏப் 15, 2025 10:46

சதுரகிரி மலையை சுற்றுலா தளம் ஆக்கி சீரழிக்க பக்தர்கள் விரும்புகிறார்கள் ..


veeramani
ஏப் 15, 2025 09:12

உலகிலேயே மெருகு தொடர்ச்சி மலை மிகவும் புராதனமானது . பல உயிரினங்கள் வசிக்கின்றன. இவற்றை காப்பாதற்காகவே தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் சதுரகிரி மஹாலிங்கம் அருள் பெறவேண்டி முழுநிலவு நாட்களில் கோவிலுக்கு செல்கின்றனர். ஆனால் மற்ற ஸ்டார் ஹோட்டல் வசதிகள் தேவையில்லை.


அப்பாவி
ஏப் 15, 2025 07:15

ஏன் சின்னதா கேக்குறீங்க? ஒரு எய்ம்ஸ் வேணும்னு கோரிக்கை வெய்யுங்க. அப்புறமா ஒரு நட்சத்திர விடுதி. அடுக்குமாடி குடியிருப்பு எல்லாம் வந்துரும்.


Svs Yaadum oore
ஏப் 15, 2025 06:10

இப்போது ஆட்சியிலிருப்பது சமூக நீதி மத சார்பற்ற கூட்டணி ....திராவிட மந்திரி சொன்னது போல ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி இது ....சமூக நீதி மத சார்பின்மையை விடியல் திராவிடனுங்க ஒரு போதும் கை விட மாட்டார்கள் ....சமூக நீதி ரொம்ப முக்கியம் ..அதனால் கோவிலில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கவும் என்ற கோரிக்கையை திராவிட மாடலில் நிறைவேற்ற முடியாது ....அது சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதிக்கு ரொம்ப எதிரானது ...


புதிய வீடியோ