உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்துாரில் உள்வாங்கிய கடல் ஆபத்தை உணராத பக்தர்கள்

செந்துாரில் உள்வாங்கிய கடல் ஆபத்தை உணராத பக்தர்கள்

துாத்துக்குடி:திருச்செந்துாரில், 100 அடி உள்வாங்கிய கடலில், ஆபத்தை உணராமல், பக்தர்கள் பாறைகள் மீது நின்று செல்பி எடுத்தனர். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் பகுதியில் அடிக்கடி உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுவது வழக்கம். அமாவாசை, பவுர்ணமி நாட்களில், சில ஆண்டுகளாக கடல் பல அடி தொலைவிற்கு உள்வாங்கி காணப்படும். ஆடி அமாவாசை என்பதால், நேற்று ஏராளமான பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின், அவர்கள் முருகனை தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் திரண்டனர். இந்நிலையில், செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை, 500 மீட்டர் நீளத்திற்கு, 100 அடி அளவுக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிகளவு வெளியே தெரிந்தது. புனித நீராடிய பக்தர்கள் பலர், பாறைகள் மீது நின்றபடி அலைபேசியில் புகைப்படமும், செல்பியும் எடுத்தனர். ஆபத்தை உணராமல் செயல்பட்ட அவர்களை, கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் எச்சரித்தனர். கடல் உள்வாங்கி காணப்பட்ட பகுதியில், எச்சரிக்கையை மீறி சிலர் உள்ளே சென்று குளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை