உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்மபுரியில் கைவிலங்குடன் தப்பியோடியவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

தர்மபுரியில் கைவிலங்குடன் தப்பியோடியவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தர்மபுரியில் கைவிலங்குடன் தப்பியோடியவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். தர்மபுரி மாவட்டம், ஏமனூர் வனப்பகுதியில் தந்தத்துக்காக யானையை சுட்டுக் கொன்ற செந்தில் என்பவர் கைது செய்யப்ட்டார். கொல்லப்பட்ட யானையில் இருந்த 2 தந்தங்களை வெட்டி எடுத்துக் கொண்டு தப்பித்த செந்தில், விஜயகுமார், துணையான இருந்த செந்தில் தந்தை கோவிந்தராஜ், தந்தத்தை வாங்க முயற்சித்த தினேஷ் ஆகிய 4 பேரை போலீஸ் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். கடந்த மார்ச் 18ம் தேதி கள விசாரணைக்காக அவர்கள் யானை சுட்டப்பட்ட பகுதிக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது செந்தில் கைவிலங்குடன் தப்பிச் சென்றார். இதையடுத்து, அவரை தமிழகம் மற்றும் கர்நாடக வனத்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். மார்ச் 18ம் தேதி தப்பிய செந்தில் ஏப்.4ம் தேதி பென்னாகரம் வனப்பகுதியில் சடலமாக கிடந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது அவரது கைகளில் விலங்கு இல்லை. அவரது மார்புக்கு மேல்பகுதியில துப்பாக்கிக்குண்டு பாய்ந்துள்ளது. அவரின் உடல் மீது நாட்டுத்துப்பாகி கிடந்தது. இதையறிந்த செந்தில் உறவினர்கள், உடலை பிரேத பரிசோதனை செய்யவும், உடலை வாங்கவும் மறுத்து வருகின்றனர். செந்தில் மனைவி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்திருந்தார். இந் நிலையில் செந்தில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு உள்ளது. அதற்கான உத்தரவை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். அதிகாரி நியமிக்கப்பட்டு அவர்களிடம் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஏப் 08, 2025 07:09

தந்த திருடனை செத்துப்போன யானையின் மகன் யானையே துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விடுங்கள்.


SUBBU,MADURAI
ஏப் 07, 2025 15:59

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவே முதலில் இந்த தமிழக டிஜிபி சங்கர்ஜிவாலை அந்தப் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை