உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்களிடம் அதிகரிக்கிறது சர்க்கரை அறிகுறி! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

மாணவர்களிடம் அதிகரிக்கிறது சர்க்கரை அறிகுறி! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வுகளில், 10 முதல் 15 வயதுக்குள் உள்ள மாணவர்கள் சிலருக்கு, சர்க்கரை நோய் பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதும், வேறு சிலர் துாக்கமின்மை பிரச்னைக்கு மருந்து உட்கொள்வதும் அறிந்து, மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு, வாழ்வியல் மாற்றங்களே காரணம் என்பதால், இவற்றை சரி செய்வதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மத்தியில், டைப்1 சர்க்கரை பாதிப்பு காணப்படுவது வழக்கம். ஆனால், தற்போது 40 வயதில் பெரியவர்களுக்கு வரும் டைப் 2 சர்க்கரை பாதிப்புக்கான அறிகுறி, 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளது.பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லுாரி சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியம் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுக்கு, 400 மாணவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில், பல மாணவர்களுக்கு டைப் 2 சர்க்கரை பாதிப்பு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் டாக்டர் சுதா ராமலிங்கம் கூறியதாவது: கோவையில், 400 பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டோம். 400ல் 16 சதவீத மாணவர்களுக்கு டைப் 2 எனும் பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை பாதிப்பு, அறிகுறிகள் தென்பட்டன.

துாக்கமின்மைக்கு மருந்து

இந்த ஆய்வு கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டது. நகர்புறங்களில் பீசா, பர்கர் எனும் துரித உணவு கலாசாரத்தை அதிகம் கொண்டுள்ள மாணவர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டால், இச்சதவீதம் மேலும் அதிகரிக்கலாம்.ஆய்வு முடிவுகள் பெரும் அபாயத்தை உணர்த்தும் வகையில் உள்ளன. தவிர, 10-15 வயதுள்ள 100 மாணவர்களில், 6-7 பேர் துாக்கமின்மை பிரச்னைக்காக மருந்து எடுத்துக்கொள்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. மொபைல் போன் பயன்பாடு, துாக்கமின்மை பிரச்னைக்கு காரணமாக உள்ளது. இரவு துாங்கும் நேரம் மாறுவதால், மொத்த ஆரோக்கிய 'சிஸ்டமும்' மாறிவிடுகிறது.

பெற்றோருக்கு கவனம் தேவை

இன்றைய குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் எனில், பள்ளி, பெற்றோர், அரசு என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.அனைத்து வகை பள்ளிகளிலும், தினந்தோறும் ஒரு மணி நேரம் கட்டாயம் விளையாட்டு வகுப்பு வைக்க வேண்டும்.பிற பாடங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் போன்று, விளையாட்டு வகுப்புகளுக்கும் அளிக்க வேண்டும். சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து துரித உணவுகளையும் தவிர்க்க, குழந்தைகளை பெற்றோர் வழிநடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.கோவை கிராமப்புறங்களில், 400 பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டோம். 400ல் 16 சதவீத மாணவர்களுக்கு டைப் 2 எனும் பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை பாதிப்பு, அறிகுறிகள் தென்பட்டன. நகர்ப்புறங்களில் பீசா, பர்கர் எனும் உணவு கலாசாரத்தை அதிகம் கொண்டுள்ள மாணவர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டால், இச்சதவீதம் மேலும் அதிகரிக்கலாம்.அனைத்து வகை பள்ளிகளிலும், தினந்தோறும் ஒரு மணி நேரம் கட்டாயம் விளையாட்டு வகுப்பு வைக்க வேண்டும். பிற பாடங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் போன்று, விளையாட்டு வகுப்புகளுக்கும் அளிக்க வேண்டும். சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து துரித உணவுகளையும் தவிர்க்க, குழந்தைகளை பெற்றோர் வழிநடத்த வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து செயல்பட வேண்டிய நேரமிது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஆக 18, 2025 20:01

வளர்ச்சி அமோகம்...


seshadri
ஆக 18, 2025 15:52

இந்த களவாணி திருட்டு திருக்குவளை கட்டுமரம் நன்றாக இருந்த கல்வி முறையை மாற்றி சமசீர் கல்வி என்று கொண்டு வந்து நீதி நெறி வகுப்பு காய் தொழில் வகுப்பு எல்லாவற்றையும் எடுத்து உருப்படாத கல்வியை கொடுத்து மாணவர்கள் மாணவிகள் எல்லோரையும் கெடுத்து குட்டி சுவராக்கி விட்டது.


Padmasridharan
ஆக 18, 2025 14:17

பள்ளிக்கூடத்தின் அருகினில் தின்பண்டங்கள் விற்கும் கடைகளை அகற்றவும் வேண்டும். இந்நாட்டில், அரசு பள்ளிகள் இருக்குமிடத்தில் என்னென்ன மாதிரி கடைகள் இருக்கின்றன தெரியுமா.


ஜெகதீசன்
ஆக 18, 2025 12:34

உடல் உழைப்போ அல்லது உடற்பயிற்சியோ இல்லாமல் போனதும், அதிக கலோரி உணவுகளும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், 20 வயதிற்குள்ளாகவே சர்க்கரை நோய் அறிகுறி என்றால், மனித இனத்தில் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண்பிக்கிறதோ?


Barakat Ali
ஆக 18, 2025 11:51

சரக்கடிச்சிட்டு, சாப்பிட்டுவிட்டு நல்லா தூங்கினா?


தத்வமசி
ஆக 18, 2025 10:50

இன்றைய வாழ்வியல் முறை முழுவதுமாக மாறி விட்டது. பெற்றோர்கள் வாரத்தில் பல நாட்கள் வெளியில் சாப்பிடும் பழக்கம் தங்களது தகுதியை காண்பிப்பதாக நினைக்கிறார்கள். நான் ஏன் சமைக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி வருகிறது. மாணவர்களிடையே சீரான உணவுப் பழக்கம் இல்லை. கடையில் வாங்கப்படும் இனிப்புகள், பிஸ்கட்டுகள், சமோசா, சாக்லேட், ஐஸ்கிரீம், பிரியாணி போன்றவையை அதிகம் சாப்பிடுகிறார்கள். அதுவும் தினமும். விளையாடுவது மிகவும் குறைந்து விட்டது. தெருவில் மற்ற குழந்தைகளோடு பழகி விடுமுறை நாட்களில் மைதானம் சென்று விளையாடுவது அனேகமாக நின்று விட்டது. டிவி-போன் என்று இதில் கவனம் அதிகமாகி விட்டது. ஒரு நாளைக்கு இருமுறை அல்லது அதிக பட்சம் மூன்று முறை உணவு சாப்பிட்டாலே போதும். இடையிடையே உண்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் இன்று குழந்தைகள் பல முறை உணவு உண்கிறார்கள். காலை வீட்டில் உண்கிறார்கள், பள்ளியில் காலை இடைவேளையின் போது உண்கிறார்கள். உணவு இடைவேளையின் போது மற்றும் மதிய இடைவேளையின் போதும் உண்கிறார்கள். மாலை வீட்டில் மீண்டும் உண்கிறார்கள். இடையில் கடையில் வாங்கி உண்கிறார்கள். இரவு சாப்பிடுகிறார்கள். ஒரு நாளைக்கு இவ்வளவு முறை உண்பதால் கட்டாயம் பக்கவிளைவுகள் ஏற்படத்தான் செய்யும்.


V RAMASWAMY
ஆக 18, 2025 10:23

அரசியல் சார்ந்த கல்வி முறை, நன்னெறி பாடங்கள் நீக்கல், பெற்றோர்களின் கவனிப்பு குறை, வெளியில் விற்கப்படும் அதிக அளவு உப்பு சர்க்கரை கலந்த உணவுப்பண்டங்கள், பானங்கள், சினிமா, மொபைல் ரீல்கள், தப்பான வாழ்க்கை முறைகள் இவையனைத்தும் மாணவர்களின் நல்ல ஆரோக்கியத்தின் கேடுகள்.


Moni Halan
ஆக 18, 2025 08:47

முறையற்ற கல்வி முறையே காரணம். 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் கல்வி என்ற போர்வையினால் குழந்தைகள் அடிமை படுத்தப்பட்டு விட்டனர். தனியார் கல்வி நிறுவனங்களுக்குள் உள்ள போட்டியும், பெற்றோர்களின் தற்பெருமை காரணமாகவே குழந்தைகள் அடிமை படுத்தப்பட்டு உள்ளனர். 8 வது படிக்கும் ஒரு குழந்தை தினமும் மூன்று மணிநேரம் வீட்டில் இருந்து எழுத மட்டுமே செய்கின்றனர். பின்பு படிப்பு வேறு.. தினமும் 5 மணிநேரம் வீட்டில் படிப்புக்கக ஆகிறது எள்றால் ஒரு குழந்தை பள்ளியில் 8 மணி நேரம என்ன செய்கினது என்று தெரியவில்லை. பின்பு எப்படி சுகர் வராமல் இருக்கும்?


GMM
ஆக 18, 2025 08:31

ஹோம் டிவி, மொபைல், கம்ப்யூட்டர் ஒரு மணிக்கு பின் 5 நிமிடங்கள் தானே இயக்கத்தை முடக்கி கொள்ள வேண்டும். தற்போது பிள்ளைகளை கட்டுபடுத்த முடியாது. நடை, விளையாட்டு போன்றவை முற்றிலும் குறைவு. நடைபாதை கடைகள் ஓட்டு வாங்க வைத்தால் சாலையில் எப்படி நடக்க முடியும்? காலி பொது இடங்கள் அபகரிப்பு அல்லது சிறுபான்மை வழிபாடு ஸ்தலம். நீந்த குளம், கிணறுகள் இல்லை. எங்கு போய் விளையாட? எங்கும் தெருநாய் தொல்லை அதிகரிக்க விலங்கு ஆர்வலர், வழக்கறிஞர், நீதிமன்றம் சிறப்பு பணி. எப்படி மாணவர்கள் விளையாட முடியும். ? சாலையோர உணவு கடைகள் மற்றும் அரசு அனுமதிக்கும் உணவு கடைகளில் தரமானவை 100 ல் 5 கூட தேறாது. பல நோய் அதிகரிக்கும்.


Jack
ஆக 18, 2025 08:24

முப்பது நாளில் அறுபது நாட்களில் விளைவிக்கப்படும் அரிசிகளில் சக்கரை சத்து மிக அதிகம் ..பாரம் சுமப்பவர்கள் கைவண்டி இழுப்பவர்களும் சக்கரை அளவு அதிகரித்து அவஸ்தை படுகிறார்கள்