உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷாவை சந்தித்த பின் மன நிம்மதி கிடைத்ததா; செங்கோட்டையன் பேட்டி

அமித் ஷாவை சந்தித்த பின் மன நிம்மதி கிடைத்ததா; செங்கோட்டையன் பேட்டி

கோவை; ஹரித்துவார் செல்வதாக கூறிச் சென்ற செங்கோட்டையன், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து திரும்பியுள்ளார். அ.தி.மு.க.,வில் பிரிந்து சென்றவர்களை, 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து பொதுச்செயலர் பழனிசாமி நீக்கினார். அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், மன அமைதிக்காக ஹரித்துவார் செல்வதாக கூறி, கோவையில் இருந்து நேற்று முன் தினம் புறப்பட்டு டில்லிக்கு சென்றார். டில்லியில் இருந்து நேற்று திரும்பிய அவர், கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: டில்லி சென்றபோது, உள்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கிடைத்தது. நிதியமைச்சரை சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழலில், அ.தி.மு.க.,வில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும்; இயக்கம் வளர வேண்டும் என்பதை அவர்களிடம் வலியுறுத்தினேன். இதன் அடிப்படையில், இன்று பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனநாயக கருத்துரிமை அடிப் படையில், ஒவ்வொருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கது. உள்துறை அமைச்சரை சந்தித்தபோது, அங்கு வந்த ரயில்வே அமைச்சரிடம், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாறுதல் குறித்து, கோரிக்கை விடுத்தேன். பரிசீலிப்பதாக தெரிவித்தார். இயக்கம் வலிமை பெற, அனைவரின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து பணியாற்றுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை