உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் மனசாட்சியை உலுக்கவில்லையா: இ.பி.எஸ்., கேள்வி

முதல்வர் ஸ்டாலின் மனசாட்சியை உலுக்கவில்லையா: இ.பி.எஸ்., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவள்ளூரில் சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். சிறுமி கடத்தப்படும் கொடூர காட்சி முதல்வர் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா ? என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஊடகங்களில் வெளியாகி உள்ள சிறுமி கடத்தப்படும் காட்சி காண்போரை நடுங்கச் செய்கிறது; நெஞ்சைப் பதைக்கிறது.இந்த கொடூரக் காட்சி முதல்வர் ஸ்டாலின் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா? தன்னுடைய ஆட்சியில், ஒரு பத்து வயது சிறுமியால் சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லையே என்ற வேதனையாவது முதல்வருக்கு இருக்கிறதா?10 வயது சிறுமியால் நடமாட முடியாத ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலின், யாருடனும் இருந்து என்ன பயன்?சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடைவதை உறுதி செய்யவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.ஆட்சி புரிவதற்கான அருகதை துளியும் இல்லாத ஒரு கட்சியிடம், பொம்மை முதல்வரிடம் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுப்பதே, தமிழகப் பெண்களைக் காக்க ஒரே வழி!. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஜூலை 18, 2025 04:09

மனம் என்று ஒன்று இருந்தால்த்தானே.. இல்லை என்றால் காமராசர் பற்றி கேடிகளை வைத்து பேசவிட்டு பழைய கூவ நிலைக்கு தீம்க்காவை கொண்டு செல்வாரா?


ராஜா
ஜூலை 18, 2025 00:53

நீங்கள் பார்த்து கேட்ட கேள்வியா இது? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 12!பேர் மனசாட்சி இல்லாமல் தங்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி தெரியுமா உங்களுக்கு?


பேசும் தமிழன்
ஜூலை 18, 2025 09:09

நேற்று உள்ளே போன டாஸ்மாக் வீரன் இன்னும் வேலை செய்கிறான் போல இருக்கு... என்ன கேள்விக்கு என்ன பதில் சொல்ற ???


Thravisham
ஜூலை 18, 2025 16:37

அவனுங்க போராட்டக்காரங்களா? போதை ஆசாமிகளை கொஞ்சம் விட்டிருந்தா ஸ்டெர்லிட் ஆலையை எரிச்சுருப்பானுங்க. ஏதோ 200 வாங்கினோமா ப்ரீயா கொடுக்குறத குடிச்சுட்டு மல்லாக்க படுத்துக்க


Ramesh Sargam
ஜூலை 17, 2025 23:20

முதல்வர் மனசாட்சியை அடகு வைத்து பிறகுதான் ஆட்சி புரிகிறார்.