உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லையா? சி.ஐ.டி.யு.க்கு ஏ.ஐ.டி.யு.சி. கண்டனம்

ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லையா? சி.ஐ.டி.யு.க்கு ஏ.ஐ.டி.யு.சி. கண்டனம்

சென்னை:'போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை எனக் கூறுவது, அடிப்படையற்ற அவதுாறு' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.'போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில், ஏ.ஐ.டி.யு.சி., தலைவர்கள் பங்கேற்கவில்லை; தொண்டர்கள் மட்டுமே பங்கேற்றனர்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., சங்க மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து, ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் எம்.ஆறுமுகம், பொதுச்செயலர் ஆர்.ஆறுமுகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர்கள் நடத்தும் நியாயமான போராட்டங்களை, சொந்த அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த, அ.தி.மு.க., முயற்சித்தது. இதற்கிடையே, சி.ஐ.டி.யு., - அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கம் இணைந்த கூட்டமைப்பு என்ற பெயரில், வேலைநிறுத்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதுகுறித்து, சி.ஐ.டி.யு., தலைமையிடம் எடுத்துச் சொல்லியும், அலட்சியப்படுத்தி விட்டு தன் வழியில் செல்ல முயன்றனர். எனவே, ஏ.ஐ.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., - ஐ.என்.டி.யு.சி., சார்பில் அறிக்கை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், 8ம் தேதி கூட்டத்துக்கும் ஏ.ஐ.டி.யு.சி.,க்கு அழைப்பில்லை. ஆனால், நாங்களாக வர வேண்டும் என, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறிய கருத்து, மேலாதிக்க போக்கை மேலும் உறுதிப்படுத்துகிறது. 'வாட்ஸாப்' குழுவில் இருந்து நீக்கப்பட்டோம். எனவே, போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., பங்கேற்கவில்லை என்று கூறுவது அடிப்படையற்ற அவதுாறு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுக்கு கடிதம்

போக்குவரத்து துறை செயலருக்கு, சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அனுப்பியுள்ள கடிதம்: வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே, யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. சமரச பேச்சில் பங்கேற்று, கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என, நீதிமன்றம் கூறியுள்ளது. வரும் 19-ம் தேதி நடக்கும் சமரச பேச்சில், கோரிக்கைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை