உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் செய்தி எதிரொலி: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுத்த வல்லுநர் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தினமலர் செய்தி எதிரொலி: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுத்த வல்லுநர் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

உடுமலை: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படுவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்று, உடுமலையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தினமலர் செய்தி எதிரொலியாக, முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1960ல் துவக்கப்பட்டது. இந்த ஆலையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18,500 விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.ஆண்டுக்கு, 10 மாதங்கள் இயங்கி, 4.5 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது. இங்குள்ள இயந்திரங்கள் நிறுவி, 64 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பெரும்பாலும் தேய்மானம் அடைந்தும், அரவை திறன் குறைந்து, சர்க்கரை உற்பத்தி பாதித்தது.ஒரு லட்சம் பேர் பாதிப்புஆலை இயந்திரங்களை புதுப்பிக்க, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக, மார்ச் மாதத்தில், பாய்லர் இளஞ்சூடு ஏற்றப்பட்டு, ஏப்.,1 முதல் கரும்பு அரவை துவங்கும். மூன்று ஆண்டுகளாக, இயந்திரங்கள் பழுது, பராமரிப்பில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், ஆலை இயக்க முடியாமல், மூடப்பட்டுள்ளது.கடந்த 15 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் நலிவடைந்து கொண்டே வந்த ஆலை, மூன்றாண்டுக்கு முன் எந்த இயக்கமும் இன்றி மூடப்பட்டது. இதனால் மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள், கரும்பு வெட்டு ஆட்கள், வாகன டிரைவர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதித்துள்ளனர்.ஆலையை முழுமையாக நவீனப்படுத்த, முதற்கட்டமாக, 56 கோடி ரூபாய் தேவை என, அரசுக்கு சில ஆண்டுகளுக்கு முன், கருத்துரு அனுப்பி வைத்தும், நிதி ஒதுக்கவில்லை. பின் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக புனரமைப்பு செய்ய, 160 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம், அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'தமிழகத்தில், கூட்டுறவு முறையில் துவக்கப்பட்ட முதல் சர்க்கரை ஆலை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையாகும். கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்த ஆலை மூடப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. சர்க்கரை ஆலையை புதுப்பித்து, உற்பத்தியை மீண்டும் துவக்க வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.தினமலர் நாளிதழ் செய்திவிவசாயிகள் நலன் கருதி தொடங்கப்பட்ட இந்த ஆலையை நலிவில் இருந்து மீட்க வேண்டும், புனரமைக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழ் சார்பில், 15 ஆண்டுகளாக தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன.தமிழக முதல்வராக இருப்போர் உடுமலை வரும்போதெல்லாம், 'முதல்வர் கவனத்துக்கு' என்ற தலைப்பில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அந்த வகையில், இன்று முதல்வர் ஸ்டாலின் உடுமலை வருகை முன்னிட்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டிருப்பது பற்றியும், அதை திறக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவான செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டது. சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து, அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.முதல்வர் அறிவிப்புஅதன் எதிரொலியாக, இன்று உடுமலையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் நல்ல அறிவிப்பை வெளியிட்டார். 'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்' என்று முதல்வர் அறிவித்தார். தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதல்வர் வெளியிட்ட இந்த அறிவிப்பு, மூன்று மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sekar
ஆக 11, 2025 17:55

தமிழக தனியார் சர்க்கரை ஆலைகளும் செயல்படுத்த வழி வகை செய்ய படவேண்டும், முதல்வர் ஸ்டாலினும் இதை செய்தால் தமிழக விவசாயம் மற்றும் பவர் உற்பத்தி மேம்படும். தமிழகம் செழித்தோங்கும்.


V RAMASWAMY
ஆக 11, 2025 17:41

Very Good, Newspaper is a powerful media and can do good to the Society if they bring to the attention of all concerned ills that confront common man frequently. Half a page may be allocated for this purpose by even inviting authenticated genuine common complaints with evidence from the readers.


Kjp
ஆக 11, 2025 17:04

குழு அமைச்சா ஜோலி முடிஞ்சுடும். தேர்தலும் முடிஞ்சிடும்.


V Venkatachalam
ஆக 11, 2025 16:37

தினமலருக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எங்களோட தலையாய வேண்டுகோள். தயவு பண்ணி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க செய்தி போடுங்க. நிச்சயமா உங்க மூலமா ஒரு வழி பிறக்கும். ஆம். அது நிச்சயம்.


Abdul Rahim
ஆக 11, 2025 14:37

இனிப்பான செய்தி சொன்ன தமிழக முதல்வருக்கும் தனது செய்தியின் மூலம் இதை வலியுறுத்திய தினமலருக்கும் வாழ்த்துக்கள்...


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 11, 2025 14:05

18,500 அங்கத்தினர்கள் ஒவ்வொரு உறுப்பினரும் தலா ₹50,000 முதலீடு செய்தாலே ₹92.5 கோடி கிடைக்கும் இவர்களின் இல்லத்தரசிகள் எல்லோருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக மாதாமாதம் அரசு இலவசமாக வழங்கிய பணமே தலா ₹48,000 சேர்ந்திருக்கும். கூட்டுறவு ஆலையை இவர்களே வங்கி உதவியுடன் விலைக்கு வாங்கி நடத்தலாம். கூட்டுறவு என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. ஒற்றுமையும் வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றில்லை.


அப்பாவி
ஆக 11, 2025 13:56

கூட்டுறவுன்னாலே ஊழல் தான். எல்லோரும் சேர்ந்து உழைக்க மாட்டாங்க. ஆளாளுக்கு ஆட்டையப் போடுவாங்க. ஒருத்தனும் தட்டிக் கேக்க மாட்டாங்க.


திகழ்ஓவியன்
ஆக 11, 2025 13:39

40 இல் வெற்றி பெற்றாரோ


Kjp
ஆக 11, 2025 17:02

அது அப்போ இப்ப வீடு வீடாக ஓட்டு பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு நடப்பு தெரியாமல் கனவு.உலகில் மிதக்காதீர்கள்.


புண்ணியகோடி
ஆக 11, 2025 13:11

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை அந்தந்த பகுதி விவசாயிகள் சங்கத்தினரிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களே ஒழுங்கா நடத்தி விடுவார்கள். விவசாயத்தை பற்றி எதுவும் அறியாத அதிகாரிகளிடம் கொடுத்தால் ஊழலும், நிர்வாக சீர்கேடுகளும் தான் நடக்கும்.


Santhakumar Srinivasalu
ஆக 11, 2025 12:56

இனி எப்ப வல்லுனர் ஆய்வு செய்து, இயந்திரம் நிறுவ அரசு அனுமதித்து, அதற்குள் இயந்திர செலவு அதிகரித்து மக்களின் வரிப்பணம் தான் வீண்.


புதிய வீடியோ