| ADDED : செப் 01, 2011 02:06 AM
ஸ்ரீவி : ஓணத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கேரளாவிற்கு அதிகளவில் மண்டை வெல்லம் அனுப்பப்படுவதால், இதன் விலை அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் கரும்பு விவசாயிகள், தாங்களே சொந்தமாக அமைத்த ஆலை மூலம், கரும்புகளில் இருந்து வெல்லம் உற்பத்தி செய்கின்றனர். இப்பகுதியில் உற்பத்தியாகும் மண்டை வெல்லம், கேரளா, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி பகுதிகளுக்கு லாரிகளில் அனுப்பப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை நடைபெறவுள்ளதால், அதிகளவில் மண்டை வெல்லத்தை லாரிகளில் அனுப்புகின்றனர். இதனால், இதன் விலையும் உயர்ந்து உள்ளது. விவசாயி தங்கசாமி கூறுகையில்,'' கேரளாவில் ஓணம் துவங்குவதால், அங்கு மண்டை வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், இங்கு உற்பத்தியாகும் மண்டை வெல்லம், கேரளா மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மாதம் கிலோ ரூ. 25 க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள், தற்போது ரூ.30க்கு கொள்முதல் செய்கின்றனர்,'' என்றார்.