உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனுவுக்கு தீர்வு காணாததால் திண்டுக்கல் கலெக்டர் கார் கண்ணாடி உடைப்பு : போதை வாலிபர் கைது

மனுவுக்கு தீர்வு காணாததால் திண்டுக்கல் கலெக்டர் கார் கண்ணாடி உடைப்பு : போதை வாலிபர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நிலப் பிரச்னையை தீர்த்து வைக்க கோரி கொடுத்த மனுவிற்கு தீர்வு காணாததால் விரக்தி அடைந்து போதையில் கலெக்டர் கார் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பழநி ஆயக்குடி அமர பூண்டியை சேர்ந்தவர் கணேசன் 34. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சொந்தமாக பகுதியில் 3 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். குடும்ப தேவைகளுக்காக நிலத்தை வைத்து ஒரு வங்கியில் லோன் கேட்க சென்றார். அப்போது வங்கி ஊழியர்கள் இந்த நிலத்திற்கு பட்டா இல்லை என்றனர். இது தொடர்பாக கணேசன், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பிப்.10 ல் நடந்த குறைதீர் கூட்டத்தில் தனது நிலத்திற்கு தடையில்லா சான்று வேண்டுமென பிரச்னையை மனுவாக எழுதி கொடுத்தார். அதிகாரிகள் முறையாக விசாரிக்காத நிலையில் கணேசன்,விரக்தி அடைந்தார். இந்நிலையில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்திற்கும் வந்த கணேசன்,தன்னுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத அதிகாரிகள் மீது ஆத்திரத்தில் இருந்தார். மாலை 6:30 மணிக்கு அதிக மது போதையில் இருந்த கணேசன், திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வாசலில் நின்றிருந்த கலெக்டர் காரின் முன் பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்தார். அங்கு பாதுகாப்பிலிருந்த போலீசார் கணேசனை, பிடித்து தாடிக்கொம்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சேதமான கலெக்டர் கார் அருகிலுள்ள விருந்தினர் மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 17, 2025 20:44

கார் கண்ணாடியை வாலிபர் டாஸ்மாக் சரக்கு அடித்த போதையால் உடைத்தார். ஆக அவரை உடைக்க தூண்டியது சரக்கு. ஆக சரக்கு தயாரிப்பாளர்களும், விற்பவர்களும் முதலில் தண்டிக்கப்படவேண்டும். பூரண மதுவிலக்கு என்று கூறி ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களும் கூட தண்டிக்கப்படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை