உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உகாண்டாவில் பரவும் டிங்கா டிங்கா வைரஸ்

உகாண்டாவில் பரவும் டிங்கா டிங்கா வைரஸ்

கம்பாலா : உகாண்டா நாட்டில் 'டிங்கா டிங்கா' எனப்படும் 'டான்சிங் பிளேக்' வைரஸ் பெண்கள் மற்றும் சிறுமியரிடையே பரவி உடல் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் டான்சிங் பிளேக் எனப்படும் வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு உடல் நடுக்கம் தீவிரமடைந்து, நடனம் ஆடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.உள்ளூர் மக்கள் இந்த நோயை டிங்கா டிங்கா நோய் என அழைக்கின்றனர். 1,518ல் பிரான்சில் முதன் முதலில் இந்த நோய் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.உகாண்டாவின் பண்டிபுக்யோ மாவட்டத்தில், 300 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், சிறுமியர். பூஞ்சை மற்றும் கெட்டுப் போன உணவுகளால் இந்த வைரஸ் உருவாகலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.நோய் பாதித்தவர்களின் மாதிரிகளை ஆய்வுக்காக உகாண்டா தலைநகரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த நோய்க்கு மருந்தாக சில ஆன்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.அதிலேயே சில நாட்களில் நோய் குணமாகிவிடுகிறது. இதுவரை இந்த நோய்க்கு யாரும் இறக்கவில்லை என உகாண்டா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை