உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்

சென்னை:திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், 48, காலமானார்.கடந்த, 1976 செப்., 11ல் தேனியில் பிறந்தார். பிளஸ் 1 முடித்த பின், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில், தந்தையுடன் இணைந்தார். கொடி பறக்குது, நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட சில படங்களில், உதவி இயக்குநராக பணியாற்றினார். மணிரத்னம் இயக்கிய, பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக இருந்தார்.தந்தையின் அறிவுரைப்படி நடிப்பு கற்றுக் கொள்ள, அமெரிக்காவின் புளோரிடா பல்கலையில், 'தியேட்டர் ஆர்ட்ஸ்' படிப்பு முடித்தார். கடந்த 1999ல் பாரதிராஜா இயக்கிய, தாஜ்மஹால் படத்தில், ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து, கடல் பூக்கள், சமுத்திரம், அல்லி அர்ஜுனா, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக 2022ம் ஆண்டு. விருமன் படத்தில் நடித்தார். மேலும், 'வெப் சீரிஸ்' ஒன்றிலும் நடித்தார். கடந்த 2023ல், பாரதிராஜா, இயக்குனர் சுசீந்திரன் மற்றும் புதுமுகங்களை வைத்து, மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார். தன்னுடன், சாதுரியன் படத்தில் நடிந்த நந்தனாவை காதலித்தார். கடந்த 2006 நவ., 19ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, அர்த்திகா, மதிவதனி என, இரு மகள்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மனோஜ், சில வாரங்களுக்கு முன், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சென்னை சேத்துப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தபோது, நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமலை மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Joseph Agustine
மார் 26, 2025 12:18

RIP


Anand
மார் 26, 2025 11:55

RIP


Sridharan
மார் 26, 2025 11:10

ரெஸ்ட் இன் பீஸ்


Nallavan
மார் 26, 2025 09:13

சொட்ட சொட்ட நினையுது தாஜ்மஹால், திருப்பாச்சி அருவாவ எடுத்துக்கிட்டு வாடா வாடா, ஈசீ எலுமிச்ச அருமையா பாடல்கள், பாடல் காட்சிகள் மனதை விட்டு விலகுமுன் , ஆழ்ந்த இரங்கல்


முக்கிய வீடியோ