உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு

ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு

சென்னை : பள்ளிகளில் ஜாதி பாகுபாட்டுடன் செயல்படும் ஆசிரியர்களை, உடனடியாக இடமாறுதல் செய்ய, பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்கள் இடையில் ஜாதி மோதல் ஏற்படுவதை தடுத்து, அவர்கள் ஒற்றுமையாக பழகி, படிக்க வழி செய்ய வேண்டும் என, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான, ஒரு நபர் குழு, கடந்த ஜூன் 18ல் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு: பள்ளிகளில் ஜாதி மற்றும் வகுப்புவாத எண்ணத்தை, மாணவர்களிடம் உண்டாக்கி, பிரிவினையை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் குறித்து புகார் வந்தால், அவர்களை உடனடியாக, வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை வாயிலாக, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, விபரங்கள் தேவை என்றால், மாணவர்களை தனியாக, தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்கு அழைத்து பேச வேண்டும். இந்த தகவல்களை பொதுவெளியில் பகிரக்கூடாது. மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரக்கூடாது. இது குறித்து, அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மாணவர்களுக்கான தொந்தரவுகள், பிரச்னைகள் குறித்து, அவர்கள் வெளிப்படையாக புகார் அளிக்க, பள்ளிகளில் 'மாணவர் மனசு' புகார் பெட்டி வைக்க வேண்டும். அதை, வாரம் ஒரு முறை, தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, புகார்களை ஆலோசனைக் குழு வாயிலாக விசாரித்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Karthikeyan Shunmuganantham
செப் 11, 2025 09:20

Why Transfer them? they will continue the same in new location too. Better terminate them.


சந்திரன்
செப் 10, 2025 19:45

பள்ளியில் சேரும் போது ஜாதி சான்றிதழ் கேட்கிறார்கள். மாணவர்கள் சேர்க்கை கோட்டா மூலமே நடக்கிறது. உண்மையாக படித்து அதிக மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி மாணவனுக்கு சீட் கிடைக்காமல் அவனைவிட மிக மிக குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சீட் தரப்படும் போது ஆசிரியர்கள் தன் ஜாதி பிள்ளைகளுக்கு சீட் கிடைக்கவில்லையே என நினைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மாணவர்கள் மத்தியிலும் ஜாதி வேறுபாடு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.


தமிழ்வேள்
செப் 10, 2025 17:40

சொந்த ஊரிலேயே வேலை பார்க்கும் எந்த அரசு ஊழியரும் , தனியார் ஊழியரும் சாதி வேற்றுமை பார்ப்பவன் , சாதிவெறி பிடித்தவராகவே இருக்கிறார்... திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை தமிழகமே ..மொழி தமிழே ...அப்புறம் என்னத்துக்கு சொந்த ஊர் /சொந்த மாவட்ட போஸ்டிங் ....பணி ஓய்வுக்கு மூன்றாண்டுகள் இருக்கும்போது சொந்த ஊர் போஸ்டிங் கொடுத்தால் போதும்... இல்லையேல் உயிர்க்கொல்லி நோய்கள் இருந்து இரண்டு ஆண்டுகளில் டிக்கெட் வாங்கிவிடுவார் என்ற மருத்துவ சான்றிதழ் இருந்தால் சொந்த ஊர் போஸ்டிங் கொடுக்கலாம் ....ஒரு ஊழியர் அவரது சாதி பெரும்பான்மையாக உள்ள எந்த ஊரிலும் போஸ்டிங் கொடுக்க கூடாது ....அப்புறம் சாதி , பேதியாகி விடும் ...


சிந்தனை
செப் 10, 2025 16:40

அது சரி ஜாதி பாகுபாடு காட்டும் சட்டத்தை என்ன செய்வது என்று யாரும் சொல்லவே மாட்டேன் என்கிறார்கள் ஏன் என்றே புரியவில்லை


ஆரூர் ரங்
செப் 10, 2025 15:10

கருணாநிதியே நான்( தேர்தலுக்காக)சாதிக் கட்சிகளை அரவணைக்கிறேன். அண்ணாவே காஞ்சிபுரம் தேர்தலில் அண்ணாதுரை முதலியார் என வேட்புமனு தாக்கல் செய்ததுண்டு. அமைச்சரவையிலும் சாதி பார்த்து நெடுஞ்செழியன் அன்பழகனுக்கு முக்கிய இலாக்காக்களை கொடுத்தார். சாதி ஒழிப்பு ஊரை ஏமாற்றும் 21 ம் பக்கம்.


ஆரூர் ரங்
செப் 10, 2025 14:52

அமைச்சர்களே சாதி மாநாடுகளில் கலந்து கொண்டு தனது சமூக ஆட்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதாக உறுதியளிக்கிறார்கள். தேர்தல் டிக்கெட்களைசாதிபார்த்து கொடுக்குறாங்க. ( முதல்வரின் சிறுபான்மை சாதிக்கு மட்டுமே 2 அமைச்சர்கள், 2 MP கள்). அப்படியிருக்க கீழே உள்ளவர்கள் சும்மா இருப்பார்களா?


Rajarajan
செப் 10, 2025 10:53

அப்போ மொதல்ல, திராவிட குலகுருவைதான் அடிக்கணும்.


தமிழன்
செப் 10, 2025 09:39

மத பாகுபடு பரவா இல்லையா ஆபிசர் ஐயோ நம்ம நாட்ல ஜாதி மத அடிப்படையில் தான வேலைல இருந்து இனாம் வரைக்கும் எல்லா கருமாந்தரமும் நடக்குது இல்லைனா எப்படி அரசியல் நடக்கும்


Nandakumar
செப் 10, 2025 08:42

தூக்கி உள்ளே வைப்பதை விட்டு விட்டு இடமாற்றமா? அந்த இடத்தையும் பாழாக்குவதற்கா?


V N Srikanth
செப் 10, 2025 08:01

GOVERNMENT AND PARTIES ARE ALSO SHOWING CASTE DIVISIONS IN ANOTHER FORM SC,ST,BC,OBC,MBC,XBC,FC etc can the goverment be thrown to bay of bengal?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை