உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் மரணம்

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் மரணம்

சென்னை : மதயானை கூட்டம், ராவணகோட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன், 46, நேற்று மாரடைப்பால் காலமானார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் விக்ரம் சுகுமாரன். இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றியவர். மதயானை கூட்டம் படம் வாயிலாக இயக்குநராக அறிமுகமானார். ராவணக்கோட்டம் படத்தையும் இயக்கினார். அடுத்த படத்தை துவக்குவதற்கான வேலையில் ஈடுபட்டு வந்தார். மதுரையில் நேற்று முன்தினம் தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து, அடுத்த படத்திற்கான கதையை கூறினார். இரவு சென்னை திரும்புவதற்காக மதுரை பஸ் நிலையம் சென்றார். இரவு 10:30 மணியளவில், பஸ் ஏறுவதற்கு முன், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்தார்.அவரது உடல், நேற்று சென்னை செங்குன்றம் அருகே பம்மதுகுளத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை