மேலும் செய்திகள்
பற்றி எரியும் நேபாளம்... பின்னணி என்ன?
10-Sep-2025
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: அரசு, 'கேபிள் டிவி' நிறுவன ஒளிபரப்பில் இருந்து, 'புதிய தலைமுறை' செய்தி சேனல், தி.மு.க., அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது. அதனால், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையை தொடர்ந்து வருகிறது, விஞ்ஞான தகிடுதத்தங்களுக்கு பெயர் போன தி.மு.க., அரசு. பாசிச போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட தி.மு.க., அரசு, ஊடகங்களில் தப்பித்தவறிக் கூட, தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில், மக்களாட்சியின் நான்காம் துாணான ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாக கருதாமல், பழிவாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக அரசு கேபிளில், புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை, தி.மு.க., அரசு உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
10-Sep-2025