உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சென்னை, ராஜரத்தினம் மைதானம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்க மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அரசு அலுவலக வளாகங்களில் ஆவின் பாலகம் அமைக்க, அனுமதி அளிக்க வேண்டும். சாலையோரம் தள்ளு வண்டி கடைகள் அமைக்க, அனுமதி அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கட்டப்படும் கடைகளில், ஐந்து சதவீத கடைகளை ஒதுக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றும், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து சிட்கோ தொழிற்பேட்டைகளிலும், ஐந்து சதவீதம் தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்.இவ்வாறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை