மேலும் செய்திகள்
டாஸ்மாக் ஊழியர்கள் 350 பேர் கைது
27-Jan-2025
வில்லியனுார் : புதுச்சேரி வடிசாராய ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையத்தில் அரசின் வடிசாராய ஆலை உள்ளது. இங்கு, கடந்த 2009ம் ஆண்டு 53 பேர் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, 2013--14ம் ஆண்டில் 44 பேர் நியமிக்கப்பட்டனர். இதனிடையே பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடத்தியதால்,53 பேர் கடந்த2015ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.இந்த நேரடி நியமனம் குறித்து ஒருவர் வழக்கு தொடர்ந்ததால், விசாரித்த உயர் நீதிமன்றம் 53 பேரின் நியமனம் செல்லாது என உத்தரவிட்டது. இதனால்ஊழியர்கள் பணி நீக்கம் செயய்யப்பட்டனர்.இந்நிலையில், வடிசாராய ஆலையில் ஒப்பந்த ஊழியர்கள் நியமனம் செய்ய உள்ளதாக தற்போது தகவல் பரவியது.இதனால், ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணி நியமனம் செய்வதை கண்டித்தும்,தங்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியும் நேற்று காலை சாராய ஆலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27-Jan-2025