உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்களுக்கு எமிஸ் பணிகள் அதிகரித்துள்ளதால் அதிருப்தி

ஆசிரியர்களுக்கு எமிஸ் பணிகள் அதிகரித்துள்ளதால் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'எமிஸ்' பதிவேற்ற பணிகள் மீண்டும் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்கள் எரிச்சலடைந்துள்ளனர். 'எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்' என்ற, கல்வி அமைச்சர் மகேஷ் உத்தரவு அவ்வளவு தானா என கேள்வி எழுந்துள்ளது.பள்ளி கல்வி துறையில் பள்ளிகள், ஆசிரியர், மாணவர்களின் அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்யும் வகையில் 'எமிஸ் போர்ட்டல்' நடைமுறையில் உள்ளது.இதில் தினமும் மாணவர்கள் வருகை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விபரங்களை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஓராண்டுக்கு முன், நெட் ஒர்க் பிரச்னையால், பதிவேற்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டு ஆசி ரியர்களின் கற்பித்தல் பணி கடுமையாக பாதித்தது.இது தொடர்பாக ஆசிரியர்களிடையே அதிகரித்த அதிருப்தி காரணமாக, 'எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்' என, கல்வி அமைச்சர் மகேஷ் அப்போது அறிவித்தார். அதன்படி அப்பணிகளில் சில குறைக்கப்பட்டன.இந்நிலையில், தற்போது கூடுதலாக, மாணவர்கள் உடல் சார்ந்த, நோய் அறிகுறி குறித்த தகவல்கள் உட்பட பல்வேறு பதிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.இதனால், மீண்டும் எமிஸ் பணிகள் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vignesh
ஆக 16, 2025 05:19

தரமாக இருந்தால் ஏன் தனியார் பள்ளிகள், தகுதி கேட்டவர்கள் சொல்லி கொடுக்க அரசு திண்ணை காலி.


M Ramachandran
ஆக 15, 2025 12:00

திருட்டு திமு கா இது மாதிரி தான் அண்டருகிரௌண்ட் வேலைய்ய செய்வதில் கில்லாடிகள். ஆசிரியர்கள் தங்கள் அடிமைகள் என்று நினைத்து கட்சி பணிக்களை கூட தலையில் கட்டும். வேறு வழி தலையெழுத்து.


Kamaraj TA
ஆக 15, 2025 07:29

ஆசிரியர்களைத் திட்டுவதே உங்களுக்கு வழக்கமாகப் போய்விட்டது. அதை விட்டுட்டு லஞ்சப் பேய்களைத் திட்டுங்க.


A MN
ஆக 15, 2025 07:09

அவங்க சம்பளம் வாங்குறது பாடம் நடத்துவது இந்த வேலைக்கு இல்லை


Kasimani Baskaran
ஆக 15, 2025 03:52

சம்பளம் வாங்கும் பொழுது அதிருப்தி வராது. வேலை செய்யவேண்டும் என்றால் வரும். ஆக போதிய வேலையில்லாமல் சம்பளம் வாங்குகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை