போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
சென்னை: தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 5,308 தொழிலாளர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், 'தீபாவளியையொட்டி, போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும், ஒரு லட்சத்து 5,955 பணியாளர்களுக்கு, போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 175.51 கோடி ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது' என்றார். தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை: தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.