உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டை: அமைதி காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டை: அமைதி காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை அதிகரித்து வரும் நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் அமைதி காப்பதாக புகார் எழுந்துள்ளது. பண்டிகை காலங்களில், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை, ஒப்பந்ததாரர்கள், அரசியல் பிரமுகர்கள் வழக்கமாக வைத்துஉள்ளனர். அத்துடன் தங்களிடம் வரும் பொதுமக்களிடம், பண்டிகை கால செலவிற்கு லஞ்சம் பெறுவதையும், சில துறை அதிகாரிகள் வாடிக்கையாக வைத்துஉள்ளனர். தீபாவளி பண்டிகை, வரும், 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான வசூல், அரசு அலுவலகங்களில் களைகட்டி வருகிறது. களைகட்டியுள்ளன நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நீர்வளம் உள்ளிட்ட பல துறைகள் வாயிலாக, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சமீபத்தில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர பல பணிகளுக்கு ஒப்பந்ததாரர் தேர்வும் நடக்க உள்ளது. இதையடுத்து, தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கவனிக்கும் பணிகளை ஒப்பந்ததாரர்கள் துவக்கி உள்ளனர். இதனால், தலைமை செயலகம், எழிலகம், நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் அரசு அலுவலகங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அலுவலகங்களிலும், ஒப்பந்த நிறுவனங்கள், அரசியல்வாதிகள் கவனிப்பால், அதிகாரிகள் உச்சி குளிர்ந்து வருகின்றனர். பண்டிகை கால பொருட்கள் நடமாட்டம், தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகளில் அதிகரித்து உள்ளது. அங்குள்ள சோதனை சாவடிகளில் வணிகவரி துறையினர் மற்றும் சோதனைச் சாவடி போலீசாரின் வசூல் வேட்டை களைகட்டி வருகிறது. தங்கள் பங்கிற்கு போக்குவரத்து போலீசாரும் வாகனங்களை மடக்கி கைநீட்டி வருகின்றனர். இனிப்பு, காரம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, சாக்லெட், உடைகள், பணம், பரிசுப் பொருட்கள் என, விதவிதமாக வசூல்களை கட்டுகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக, பட்டா, நிலம் மாற்றம், புதிய சிறுதொழில் நிறுவனங்கள், வீட்டு மின் இணைப்பு என, வருவாய் மற்றும் மின்வாரியம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மவுனம் இதில் காரியம் சாதிக்கவும், துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை, பொதுமக்கள் அணுக துவங்கி உள்ளனர். அவர்களிடம் கோரிக்கையின் தன்மைக்கேற்ப, வசூல் வேட்டை நடந்து வருகிறது. இதுபோன்ற பண்டிகை காலங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஆங்காங்கே அரசு அலுவலகங்களில் சோதனை நடத்துவர். இந்த ஆண்டு சோதனை நடத்தாமல், மவுனம் காக்கின்றனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், லஞ்சம் தொடர்பான பிரச்னைகள் வெளியே தெரியாமல் இருக்க, லஞ்ச ஒழிப்பு துறையினர் அடக்கி வாசித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், அன்பளிப்பு, பரிசு பொருட்கள் என்ற பெயரில், லஞ்ச வேட்டை நடக்கிறது. இதை கண்காணிக்க, லஞ்ச ஒழிப்பு துறையில் உளவு போலீசார் உள்ளனர். அவர்களுக்கு லஞ்ச வேட்டை நடப்பது தெரியும். ஆனால், அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் உள்ளனர். அத்துடன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் வசூல் வேட்டை நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Nandakumar Naidu.
அக் 13, 2025 18:00

லஞ்ச ஒழிப்புத்துறையே லஞ்சம் வாங்கினால்? எனது சந்தேகம் தான், இப்படி கேள்வி கேட்டேன்.


sasikumaren
அக் 13, 2025 16:45

இந்த கொள்ளை அடிப்பது எல்லா காலங்களிலும் இருக்கிறது ஏதாவது ஒரு சில இடத்தில் சோதனை நடத்தி விட்டு சில ஆயிரங்களை காண் பிடித்து நாம் மக்களை நாம் பெரு மகிழ்ச்சி அடைந்து விடுகிறோம்


baala
அக் 13, 2025 12:23

இப்படி பணம் வாங்க சாப்பிடுவதை விட அதற்கு பதில் வேறு எதையாவது சாப்பிடலாம்.


Raghavan
அக் 13, 2025 12:00

அவர்களுக்கு சேரவேண்டியதை முன்னமே கொடுத்திருப்பார்கள். கடைசியில் ஒரு கீழ்மட்ட ஊழியர்களை பிடித்துவிட்டு தாங்களும் வேலை செய்வதாக காண்பிப்பார்கள்.


Chandru
அக் 13, 2025 09:32

அடுத்த வருடம் தி மு க ஆட்சி இருக்காது . அதனால் முடிந்த வரை இப்போதே பைகளை ரொப்பி கொள்ளலாம் என்று முடிவு கட்டி விட்டார்கள்


naranam
அக் 13, 2025 08:26

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆக அதிக ஊழல் லஞ்சம் பித்தலாட்டம் போன்றவை தலைவிரித்தடுகின்றன. திராவிட மாடலின் அலங்கோல ஆட்சியின் உச்ச கட்ட ஆட்டம்.. மானம் கெட்ட மனிதர்கள் தான் இப்படி ஏழை பணக்காரன் என்ற பேதம் பார்க்காமல் சக மனிதர்களைச் சுரண்டி, அப்படி வந்த செல்வத்தில் தான் தங்கள் குடும்பத்தினருடன் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் வாழ்வு எப்படி தழைக்கும்? மரத் தமிழன், திராவிடன் என்றெல்லாம் தற் பெருமை ஒரு புறம்.. மற்றொரு புறம் சாமானிய மனிதர்களைக் கூட விட்டு வைக்காத லஞ்சம் பிச்சை..மரத் தமிழனுக்கு மானம் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.. ஒருமுறையாவது, அதிமுக திமுக காங்கிரஸ் உள்பட ஒரு முதல்வயாவது அரசு ஊழியர்கள் இப்படி லஞ்சம் வாங்குவதைக் கண்டித்துப் பொது வெளியில் பேசியுள்ளாரா. வெட்கக் கேடு..


G Mahalingam
அக் 13, 2025 08:26

லஞ்ச ஒழிப்பு துறை அப்பா கட்டுபாட்டில் இருக்கு. அப்பாவே வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையும் வாங்குகிறது. அதில் பாதி அப்பாவுக்கும் செல்கிறது. அப்பாவுக்கு பல இடத்தில் இருந்து கப்பம் வருகிறது.


c.k.sundar rao
அக் 13, 2025 08:23

Yellam Dravidian model govt .


Palanisamy T
அக் 13, 2025 08:18

லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் எல்லாக் காலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கலாச்சாரமாக இன்றும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது. பண்டிகைக் காலங்களில் மட்டும் மற்றச் சலுகைகளோடு வெளிப்படையாக மிகமிக அதிகம். கேள்வியென்ன வென்றால் வெளிப்படையாக நடக்கும் இந்த ஊழல்களை ஏன் லஞ்சம் ஒழிப்புத்துறை கண்டுக் கொள்ளவதில்லை. இது அவர்களின் அன்றாட முக்கியக் கடமையென்பதை மறந்துவிட்டார்களா? அரசுதான் மக்களிடம் விளக்கம் தரவேண்டும்.


V Venkatachalam
அக் 13, 2025 08:08

இவனுங்களுக்கே லஞ்சம் வேணும். அவனுங்க வெளிப்படையா பண்றதை இவனுங்களாள வெளிப்படையா பண்ண முடியல.அப்பாவுக்கும் பங்கு போறதால எங்க கண்களை நாங்களே கட்டிக்கிட்டோம். நீதி தேவதை கண்களை கட்டி கிட்டு தானே நிக்குறாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை