உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி மின் நுகர்வு

தீபாவளி மின் நுகர்வு

தீபாவளி மின் நுகர்வு 26 கோடி யூனிட் சென்னை: தீபாவளி தினத்தன்று தமிழக மின் நுகர்வு, 25.84 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது. தமிழகம் முழுதும் வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும், 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது. தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, இந்தாண்டு ஜூலை, 17ம் தேதி, 47.54 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. மின் நுகர்வு இம்மாதம் 6ம் தேதி, 37.64 கோடி யூனிட்களாக இருந்தது. அன்று முதல் தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் மின் நுகர்வு, 7ம் தேதி, 33 கோடி யூனிட்களாக குறைந்த நிலையில், தீபாவளி கொண்டாடப்பட்ட, 8ம் தேதி, 25.84 கோடி யூனிட்களாக சரிவடைந்தது. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் மின் நுகர்வு, 22.66 கோடி யூனிட்களாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sundara Varadhan
நவ 10, 2026 08:12

தீபாவளி தினத்தன்று மாலை நேர உச்ச கட்ட மின் பயன்பாடு வெகுவாக குறைந்தது. தீபாவளிக்கு முன்னதாக 18500 மெகாவாட் ஆக இருந்தது, தீபாவளி தினத்தன்று 11300 மெகாவாட் ஆக குறைந்தது. தொழிற்சாலைகளின் விடுமுறையை இதற்கு முக்கிய காரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை