தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
அமைச்சர் செந்தில் பாலாஜிகல்விக்கான நிதி விவகாரத்தில் தமிழக மக்கள் நலன் மற்றும் தமிழக உரிமைகளில் அக்கறை கொண்ட அனைவரும், மத்திய அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகின்றனர்.வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்னைகளைக் கூட, மாநில சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக திரித்து, தி.மு.க.,வுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி, தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார். சிறு விவகாரங்களை ஒதுக்கி விட்டு, மாநில பிரச்னைக்கு குரல் கொடுக்க வேண்டாமா; இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல், நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்கு குழி பழனிசாமிக்கு?இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதை, கொள்கை முழக்கமாக முழங்கிய, அண்ணாதுரை பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலர் என கூறிக் கொண்டு, மத்திய அரசை கண்டிக்கக்கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி, தயவுசெய்து அண்ணாதுரை பெயரை விட்டுவிட வேண்டும். எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும், தமிழக மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து, கடந்த 28ம் தேதி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால், ஐந்து கட்சி அமாவாசை, 10 ரூபாய் தியாகி பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஹிந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்விக் கொள்கையே ஆனாலும், அதை அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்கும். இருமொழிக் கொள்கையை, எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அ.தி.மு.க., தான் ஒரிஜினல் திராவிட இயக்கம். தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. இவர்களின் அரசியல் விளையாட்டால், உண்மையில் பாதிக்கப்படுவது மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்.கல்விக் கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தை காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி, ஒருபோதும் தடைபடக் கூடாது. எனவே, தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.