உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை விசாரிக்கவும்: அண்ணாமலை

தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை விசாரிக்கவும்: அண்ணாமலை

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே, பல நுாறு ஆண்டுகள் பழமையான அம்மன் சிலையை, வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த, தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகி விக்னேஷ் என்ற விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விக்னேஷ், ஓட்டப்பிடாரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சண்முகையாவுக்கு நெருக்கமானவர் என்றும், இந்த சிலை கடத்தலில், எம்.எல்.ஏ.,வுக்கு தொடர்பு இருப்பதாகவும், மக்கள் புகார் கூறுகின்றனர். ஆனால், தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதாலேயே, சிலை கடத்தல் வழக்கில் சண்முகையா, இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிய வருகிறது. யாராக இருந்தாலும், முறையான விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரையும், சட்டத்தின் முன், அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Saravanan Gurunathan
மே 25, 2025 16:15

திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிற ஆட்களுக்கு தில் இருந்தால் திமுகவை தனித்து நிற்க சொல்லவேண்டியது தானே திமுக வரலாற்றில் இதுவரை தனியாக நின்று தேர்தலை சந்தித்த வரலாறு என்றைக்கும் கிடையாது


MURALIDHARAN ARAVAMUDHAN
மே 20, 2025 13:30

HELLO Mr. SENTHIL, IF YOU DMK OR ADMK HAVE GUTS, ASK THEM TO STAND ALONE WITHOUT ANY NATIONAL PARTY LIKE CONGRESS, COMMUNIST & BJP. IN DMK LIFE, NEVER EVER THEY CONTESTED THE ELECTION WITHOUT ALLIANCE. NOW YOU TELL ME WHO IS STANDING DMK OR NATIONAL PARTIES.


Tetra
மே 20, 2025 11:00

எவ்வளவு தன்னம்பிக்கை நம் முதல்வருக்கு . பூ மேடையில் உட்கார்ந்து கொண்டே வாக்கு சேகரிக்கிறார். மக்களும் வாக்களிக்கின்றனர். இதுவே நிலை


Senthil
மே 20, 2025 12:25

Yes, தொடர்ந்து திமுக, அதிமுகவுக்கு மட்டுமே வாக்களிப்போம், ஆனால் இம்முறை திமுகவுக்கு மட்டுமே வாகிகளிப்போம்.


N Sasikumar Yadhav
மே 20, 2025 10:31

தமிழகத்தில் சில கோபாலபுர கொத்தடிமைகள் தலைவன் விஞ்ஞான ரீதியாக கொள்ளையடித்து சரியான முறையில் கொடுத்து விடுவதால் திருட்டு திமுகவுக்கு சொம்படிக்க ஏராளமான கொத்தடிமைகள் சிக்கிவிடுகிறார்கள்


Senthil
மே 20, 2025 12:29

எப்படி, மத தீவிரவாதிகள் காளை மாடு பால் கறக்குதுனு சொன்னாக்கூட ஆமாம் என தலையாட்டிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போடுற மாதிரியா? தமிழ்நாட்டு அரசியலில் என்ன வேலை? பிழைக்க வந்த இடத்தில் வந்த வேலையை மட்டும் பார்க்கவும், எங்கள் அரசியலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.


Madras Madra
மே 20, 2025 10:25

உண்மையான எதிர் கட்சி தலைவர் அண்ணாமலை மட்டுமே


E. Mariappan
மே 20, 2025 17:05

அவருக்கு தான் அவங்க ஆட்களே ஆப்பு அடித்து விட்டார்கள்


SAMANIYAN
மே 20, 2025 10:21

ஒரு அரசியல் கட்சி தன் தொண்டர்களை ஊக்குவிக்க வேறு எப்படி சொல்ல அய்யா.. ஜெய்க்க முடியாது முயற்சி பண்றோம் அப்டினா சொல்ல வேண்டும்.. அரசியல் பற்றி அரைகுறை அறிவு உள்ளவன் தான் உங்களை மாதிரி அவரை குறை சொல்லுவான்..அண்ணாமலை தமிழ் நாட்டின் வர பிரசாதம் காலம் அனைவர்க்கும் பதில் சொல்லும் ..


Senthil
மே 20, 2025 12:32

வாய்ப்பு இல்லை என்பதைவிட வாய்ப்பே இல்லை. திமுக அதிமுகவுக்கு மட்டும்தான் இங்கு ஓட்டு, மற்றவரெல்லாம் அவர்களிடம் சீட்டுக்காக வாசற்படி காத்து நின்றுதான் ஆகவேண்டும், அதுதான் தலையெழுத்து. எப்படி குட்டிக்கரணம் அடிச்சாலும் இங்கு வாய்ப்பில்லை.


Mario
மே 20, 2025 08:55

இந்த கொசு தொல்லை தாங்கமுடியால


Lakshminarasimhan
மே 20, 2025 08:14

இவர் சொன்னா சரியாய் தான் இருக்கும் ஏனென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெறும்னு சொன்னாரு நடந்ததா இன்னும் ஏன் சில வெத்து வீட்டு கும்பல் இவனுக்கு சொம்படிக்குறானுங்க ?


Senthil
மே 20, 2025 12:34

இவர் மட்டுமில்லை எவர் சொன்னாலும் இங்கு நடக்காது. காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் என எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தலைவர்களின் வீட்டு வாசற்படியில் சீட்டுக்காக காத்து நின்னுதான் ஆக வேண்டும், அதுதான் அவர்களின் தலையெழுத்து.


Thiru, Coimbatore
மே 20, 2025 07:45

இவர் சொன்னா நிச்சயம் சரியா தான் இருக்கும்... தயவுசெய்து விசாரிங்க அரசே...


D Natarajan
மே 20, 2025 07:45

கடவுள் கூட காப்பாற்ற முடியாது. 2026ல் பாடம் புகட்ட வேண்டும்


சமீபத்திய செய்தி