உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் மருமகள் காவல் நீட்டிப்பு

தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் மருமகள் காவல் நீட்டிப்பு

சென்னை:வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன், மருமகள் ஆகியோரின் நீதிமன்ற காவலை, வரும் 23ம் தேதி வரை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன், அவரது மனைவி மார்லினா ஆகியோர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில், திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், கடந்த மாதம், 25ல் தனிப்படை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இருவரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது இருவரின் நீதிமன்ற காவலை, வரும் 23 வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார். ஜாமின் கேட்டு, இருவரும் தாக்கல் செய்த மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 6ம் தேதி தள்ளுபடி செய்து விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்