உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே முகாமில் தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் : கருணாநிதி

ஒரே முகாமில் தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் : கருணாநிதி

சென்னை: ''தி.மு.க.,வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரெதிர் முகாம்களில் இருக்க வேண்டிய கட்சிகள் அல்ல,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க.,வும், மார்க்சிஸ்டும், கொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிகள் அல்ல. தேர்தல்களில் உறவுகள், உடன்பாடுகள் வராமல் போகலாம். ஒரு தேர்தலில் தனித்தனி அணியிலே இருக்கலாம். மற்றொரு தேர்தலில் ஒரே அணியில் இருக்கலாம். எனவே, இவை இரண்டும் அடிப்படையில், எதிரெதிர் முகாமிலே இருக்க வேண்டிய கட்சிகள் அல்ல. தேர்தலில், ஓரிரு இடங்களில் பெறும் வெற்றி பெரிதல்ல என்பதை, இனியாவது ராமகிருஷ்ணன் மனதிலே கொண்டு கருத்துகளை வெளியிட வேண்டும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை