சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக - அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 9 தொகுதிகளில் உதயசூரியன் - இரட்டை இலை சின்னங்கள்நேரடியாக மோதுகின்றன.லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 20) வெளியிட்டார். 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்ததுடன், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். முன்னதாக, அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bp00qyem&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் மொத்தம் 9 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன. அதாவது, வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, சேலம், ஈரோடு, தேனி, நாமக்கல் ஆகிய 9 லோக்சபா தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக., உதயசூரியன் - இரட்டை இலை சின்னங்கள் நேரடியாக மோதுகின்றன.மீண்டும் 'சீட்' பெற்றவர்கள்
அதேபோல், திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், ஆ.ராசா, கனிமொழி, சி.என்.அண்ணாதுரை, ஜி.செல்வம் ஆகிய 10 பேருக்கு மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளித்துள்ளது. அதிமுக தரப்பில், 2014-19 காலகட்டத்தில் எம்.பி.,யாக இருந்த ஜெயவர்தனுக்கு இம்முறை 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.வாரிசுகள்
திமுக.,வின் வேட்பாளர்கள் பட்டியலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகளும், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கப்பாண்டியன், அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு ஆகிய 6 வாரிசுகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.'சீட்' மறுக்கப்பட்டவர்கள்
கடந்த முறை போட்டியிட்ட பொன்முடி மகன் கவுதம் சிகாமணிக்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தர்மபுரி எம்.பி.,யாக இருந்த டாக்டர் செந்தில்குமாருக்கு இத்தேர்தலில் இடமளிக்கப்படவில்லை. இவர் பலமுறை ஹிந்து விரோத கருத்தை தெரிவித்து வந்தார். பூமி பூஜை செய்யும்போது அனைத்து மதத்தவர்களும் வரவேண்டும் என வாய்க் கொழுப்பாக பேசியதால் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 6 முறை எம்.பி.,யாக இருந்த பழனிமாணிக்கம், சேலம் பார்த்திபன், தனுஷ் எம்.குமார், ஞானதிரவியம் ஆகியோருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.