உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க., கூட்டணி ‛மூழ்கும் கப்பல்

 தி.மு.க., கூட்டணி ‛மூழ்கும் கப்பல்

டாஸ்மாக் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மாநகராட்சி கொசு மருந்து அடிக்கும் பணியாளர்கள் என பலரும் தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்ததை, 'மூழ்கும் கப்பல்' என எதிரணியினர் விமர்சிக்கின்றனர். எங்கள் கூட்டணி மூழ்கும் கப்பல் தான்; ஆனால் 'நீர்மூழ்கிக் கப்பல்' என்பது தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும். அ.தி.மு.க., கொள்கையளவில் வீழ்ந்து விட்டது. த.வெ.க., தலைவர் விஜயின் அரசியல் வருகை, எங்கள் கூட்டணியை பாதிக்காது. சட்டசபை தேர்தலுக்கான தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு கூட்டம், நாளை மறுதினம் சென்னையில் நடக்கிறது. அதில், தொகுதி பங்கீடு பேச்சு நடத்துவதற்கான குழு அமைக்கப்படும். - வீரபாண்டியன் மாநில செயலர், இ.கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை