உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக கூட்டணி மோதல் வெட்டவெளிச்சம்; விசிக., கம்யூ., மதிமுக.,வுக்கு காங்., எம்.பி., எச்சரிக்கை

திமுக கூட்டணி மோதல் வெட்டவெளிச்சம்; விசிக., கம்யூ., மதிமுக.,வுக்கு காங்., எம்.பி., எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

'மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகியவை, லட்சுமண ரேகையை மதித்து நடக்க வேண்டும்,' என்று காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கை, திமுக கூட்டணியில் இருக்கும் மோதலை வெளிக்காட்டுவதாக உள்ளது.அவரது அறிக்கை: விடுதலை சிறுத்தைக்கட்சி, மதிமுக, கம்யூ., கட்சிகள் ஆகியோர், எதிர்கட்சி தலைவர் ராகுலிடம் காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி புகார் கூறிய செய்தி படித்தேன். இது, ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார், மதிமுகவின் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா? கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன. பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.

கூட்டணி ஒழுக்கம்

ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது பாஜ., ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்களின் தன்மான உணர்வை தூண்டும்.கம்யூ., தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் , கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

லக்ஷ்மண் ரேகை

அதேபோல், துரை வைகோ, திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மவுனம் அல்ல. ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல. இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தாமரை மலர்கிறது
டிச 31, 2025 22:24

காங்கிரஸ் கட்சி விஜய் தலைமையிலான அணில் கூட்டணிக்கு செல்ல இருக்கிறது.


முருகன்
டிச 31, 2025 16:47

நாடாளுமன்ற தேர்தலில் தோற்ற நீர் பேசுவது வேடிக்கை


பச்சமுத்து,சத்திரப்பட்டி
டிச 31, 2025 17:37

அறிவாலய அடிமை உனக்கு இது போல் பேசுவது வாடிக்கை


SUBBU,MADURAI
டிச 31, 2025 15:42

நம்மளோட வாய் முகூர்த்தம் உண்மையில் பலிக்கும் போல இருக்கே! காலையில்தான் திமுக மற்றும் காங்கிரஸ் எக்கு கூட்டணி கலகலத்துக் கொண்டிருக்கிறது என்று பதிவிட்டேன் இந்தா இப்போது லேசாக விரிசல் விட ஆரம்பித்து விட்டது. திமுகவிற்கு இந்நேரம் குலை நடுங்க ஆரம்பித்து இருக்கும் அதனால் மண் கோட்டையை மேற்கொண்டு விரிசலடைய விடாமல் இருக்க அடேய் சும்மா இருங்கடா என்று வடிவேல் பாணியில் திருமாவையும், துரை வைகோ மற்றும் கம்யூனிஸ்டுகளையும் அடக்கி வைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லாவிட்டால் தங்கள் தன்மானம் காக்க தங்கள் கட்சியின் ஆஸ்தான புலவர் ஆர்.எஸ் பாரதியை விட்டு லேசாக உறும விடுவார்களா என்று மேற்கொண்டு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்!


Kumar
டிச 31, 2025 14:52

சூப்பர். திமுக தோல்வி உறுதி பண்ணியாத்து


veluswamy
டிச 31, 2025 15:08

ஆடே அறுக்கலே அதுக்குள்ளே அப்பா குறிப்பிட்ட பக்கம் எனக்கு என்றான் . அது போலெ உள்ளது


Barakat Ali
டிச 31, 2025 14:45

சோ துக்ளக்கார் கட்சிக்கு மக்கள் ஆதரவு போயிந்தின்னு கூட்டணிக் கட்சிகளுக்கே தெரிஞ்சிருக்கு .......


T.Senthilsigamani
டிச 31, 2025 14:30

திமுக கூட்டணி மோதல் வெட்டவெளிச்சம் விசிக., கம்யூ., மதிமுக.,வுக்கு காங்., எம்.பி., எச்சரிக்கை. சபாஷ் சபாஷ் சபாஷ் அப்பாடா இவர் ஒருவராவது காங்கிரஸ் கட்சியில் ,தூத்துக்குடி விளைச்சலை கவளம் சாப்பாட்டில் கலந்துண்ணுவதை காண, கண்கொள்ளா காட்சியாய் விருந்தளிக்கிறது . சுதந்திரம் வாங்கும் முன்பே தோன்றிய பழமையான ,புராதன கட்சியை நேற்று பெய்த மழையில் பூத்த காளான் கட்சிகள் விமர்ச்சிப்பதை யாராலும் பொறுத்து கொள்ள முடியாது .இந்த ரோஷம் அனைவருக்கும் வரவேண்டும் .தண்டி, வேதாரண்யம் என எங்கிலும் விளையும் விளைச்சல்களை விரும்பி உணவில் சேர்த்துண்ண காங்கிரஸ் கட்சியினர் முன்வரவேண்டும் .அந்நாளில் காமராஜர் ஆட்சி பற்றிய கனவாவது நனவாக காணலாம்


ராமகிருஷ்ணன்
டிச 31, 2025 14:24

மரியாதை, நாகரீகமாக சொல்லி உள்ளார். ஆனால் விசிக, கம்யூனிஸ்ட், மா திமுகா இவர்கள் சிறிதும் நாகரீகம் அற்றவர்கள். எப்படியோ அடித்து, பிடித்து கூட்டணி பிய்த்துக் கொண்டு போனால் நாட்டுக்கு, மக்களுக்கு நல்லது.


sengalipuram
டிச 31, 2025 14:20

ஆக கிளம்புவதற்கு தயாராகிவிட்டார்கள் .


Rameshmoorthy
டிச 31, 2025 13:56

It’s actually shame on you to have alliance with these parties


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை