உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான் கூட்டணி வைக்க தி.மு.க., கூட்டணி தலைவர்கள் இதை செய்யணும்: சீமான் சொன்னது இதுதான்!

நான் கூட்டணி வைக்க தி.மு.க., கூட்டணி தலைவர்கள் இதை செய்யணும்: சீமான் சொன்னது இதுதான்!

சிவகங்கை: 'தி.மு.க.,வில் கூட்டணி வைத்திருக்கும் தலைவர்கள் கொலை நடப்பது, ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் நான் கூட்டணி வைக்கிறேன்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சிவகங்கையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: நல்ல ஆட்சி வரவேண்டும். நல்ல அரசியல் வரவேண்டும் என்று நினைக்கக்கூடிய பெருமக்கள் என்ன சொல்ல வேண்டும் என்றால், கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என்று சொல்லக்கூடாது, கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என்று தான் கேட்க வேண்டும். கூட்டணி வைத்து வென்று போனவர்கள் சட்டசபையிலும், பார்லிமென்டிலும் படுகிற பாடை நீங்கள் பார்க்கிறீர்களா?https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zrv71g5o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான் சுதந்திரமாக நீங்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் ஒரு தலைவரை இப்படி உட்கார்ந்து, நீங்கள் ஒரே கொலையா நடக்கிறது, ரூ.ஆயிரம் கோடி ஊழல் என்ற கேள்விக்கு தி.மு.க., வில் கூட்டணி வைத்திருக்கும் தலைவர்கள் பதில் சொல்லிவிட்டால் நான் கூட்டணி வைக்கிறேன். அதாவது நாட்டு மக்கள் எல்லா உரிமையும் பெற வேண்டும் என்று போராட வந்துவிட்டு, நானே சுதந்திரத்தை இழந்து விட்டு நின்று விட்டேன் என்றால்? நீங்களே பார்த்தீர்கள் பாண்டே நிகழ்ச்சியில் நானும், செங்கோட்டையனும் பங்கேற்றோம்.நிகழ்ச்சியில் நான் நினைக்கிறது எல்லாம் பேசினேன். அவரே ( செங்கோட்டையன்) சொல்கிறார் சீமான் நினைக்கிறதெல்லாம் பேசுகிறார். நான் சிக்கலில் இருக்கிறேன் என்று சொல்கிறார். அவ்வளவு பெரிய தலைவரே இக்கட்டில் இருந்தால், நாடும் மக்களும் எப்படி இருப்பது? கூட்டணி வைக்காமல் முப்பத்தாறு லட்சம் மக்கள் ஓட்டு போட்டு உள்ளார்கள். 2026ல் இதே 62 ஆக மாறினால் என்ன செய்வீர்கள்.அதிகாரத்திற்கு வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்கள். வந்து மக்களுக்கு என்ன கொடுத்திருக்கிறார்கள்? நான் அதிகாரத்தை வெல்லவில்லை, ஆனால் நான் சொல்வது நடக்கிறதா இல்லையா? வீட்டை இடித்துவிடு பார்ப்போம் என்கிறேன். விவசாய நிலத்தை எடுத்து பார் என்கிறேன். பரந்தூரில் விமான நிலையத்தை கட்டிப்பார் என்றேன். அவர்களால் முடியவில்லை. இந்த துணிவோடு கூட்டணி வைத்து அதிகாரத்தில் உட்கார்ந்து இருப்பவர்களால் பேச முடிகிறதா? முடியவில்லை. தனியாக நின்று வெல்ல முடியாது என்று பேசாதீர்கள். கெஜ்ரிவாலால் முடிகிறது என்னால் முடியாதா? 2014 இல், ஜெயலலிதா தனியாக நின்று பார்லிமென்டில் 37 இடங்களில் வென்றார். நீங்க உடனே அவசரப்படுதீர்கள். மரம் வைத்து தண்ணீர் ஊற்றி உரம் போட்டு வளர்க்கிற நானே உடனே காய்க்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. நான் தோற்றுவிட்டேன். வலுவான கட்டடத்தை கட்டி விட்டு போகிறேன். என் தங்கச்சி வந்து வென்று விட்டு வாழ்ந்துட்டு போகிறார். என் முன்னோர்கள் செய்யவில்லை. நாங்கள் செய்துவிட்டு போகிறோம். உடனே வர வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராமகிருஷ்ணன்
மார் 22, 2025 06:31

உனக்காக எவனும் எதுவும் செய்ய மாட்டான். அந்த அளவுக்கு ஒர்த் இல்லாத பீஸ். ஓரமாக நின்னு ஓவராக கத்திட்டு போ, 4 பேர் கை தட்டுவான்


தாமரை மலர்கிறது
மார் 21, 2025 23:15

தமிழ் தேசியம் என்பது ஒரு மலையாளிக்கும் ஒரு தெலுங்கச்சிக்கும் பிறக்கும் குழந்தை தான் சுத்தமான தமிழன் என்று சீமான் அவரது தம்பிகளுக்கு உசுப்பேற்றி சொல்லி கொடுத்துள்ளார். இதை தாண்டி அவரது தம்பிகள் வசைச்சொற்களில் டாக்டர் பட்டம் அவரை போன்றே பெற்றவர்கள். வசைச்சொற்களில் திருவள்ளுவருக்கே தெரியாத வார்த்தைகள் சீமானுக்கும் அவரது தம்பிகளும் நன்கு பயின்றவர்கள். இது போன்ற சிந்தனையாளர்கள் இந்தியாவிற்கு மிகவும் அவசியம். ஆனால் திடிரென்று இப்போது சைமனுக்கு ஸ்டாலினுடன் கூட்டணி வைக்கும் ஆசை எப்போது வந்தது? இருபத்திமூன்றாம் மைக் புலிகேசி வீட்டிற்கு ரைடு விட்டால், அண்ணன் தெளிஞ்சுடுவார். இல்லன்னா, தெளிய வைச்சு தெளிய வைச்சு அடிப்போம்.


மதிவதனன்
மார் 21, 2025 21:42

அன்னே நீ பிஜேபி பி டீம் , இல்லை என்றால் திரள் நிதி எங்கிருந்து வருது ED ரைட் விட்ட்டால் அப்போ தெரியும் உன் பவிசு , உனக்கு கனடா விடுதலை புலிகள் இடம் இருந்து தானே வருது , என்னவோ யோக்கியன் போல பேசுற , நீயே திரள் நிதி திருடன் ஆகவே நீ யோக்கியன் இல்லை , OMR இல் வீடு AC காரு தினம் 20 பௌன்சர்ஸ் இதெற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருது யோக்கியனே


Raj S
மார் 21, 2025 22:30

இந்த திரள் நிதியும், விஞ்ஞான ஊழலும் இல்லனா கட்டைல போன மரம் குடும்பம் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி இருக்க முடியாது...


Appa V
மார் 22, 2025 01:03

200 க்கு ரொம்பவே கூவுற


முக்கிய வீடியோ