உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவிக்கும் தி.மு.க.,: அண்ணாமலை சாடல்

விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவிக்கும் தி.மு.க.,: அண்ணாமலை சாடல்

சென்னை: '' விளம்பரத்துக்காக பட்ஜெட்டில் பல கோடி மதிப்பீட்டில் திட்டங்களின் பெயர்களை அறிவிப்பதும், ஆனால், மானியக் கோரிக்கையில் அந்தத் திட்டங்களுக்கு நிதியே ஒதுக்காமல் இருப்பதும், திமுக அரசின் வாடிக்கையாகி விட்டது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில்தான் இருக்கின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w4q4drnb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று சட்டசபையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 7,500 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2,497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாக சொன்னார்கள். இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாக, பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். ஆனால், மானியக் கோரிக்கையில், அன்பழகனார் என்ற பெயரே இல்லை. நபார்டு வங்கியிடமிருந்து, ஊரக அடிப்படை வசதி வளர்ச்சி நிதியின் கீழ் பெறப்பட்ட கடன் உதவி மூலம் பள்ளிக் கூடங்கள் கட்டும் பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது. அதற்கும் சென்ற ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 - 2024 ஆம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 560 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யவில்லை என்பது மானியக் கோரிக்கையில் தெளிவாகிறது. ஆனால், நேற்று சட்டசபையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, அமைச்சர் பெரியசாமி கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே கட்டடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் செயல்படுவதை நாம் பார்த்தோம். விளம்பரத்துக்காக பட்ஜெட்டில் பல கோடி மதிப்பீட்டில் திட்டங்களின் பெயர்களை அறிவிப்பதும், ஆனால், மானியக் கோரிக்கையில் அந்தத் திட்டங்களுக்கு நிதியே ஒதுக்காமல் இருப்பதும், திமுக அரசின் வாடிக்கையாகி விட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும். பெயரளவுக்குத் திட்டங்களை அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் நாடகமாடும் போக்கினை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

S.Martin Manoj
மார் 21, 2025 13:13

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ஓவாவுக்கு கொடுப்போம் அப்பிடின்னு ஆட்சிக்கு வந்து 11 வருடம் ஆகிவிட்டது அதுமாதிரியா. பெட்ரோல் டீசல் விலை குறைத்தால் உங்கள் எஜமானர்கள் வருமானம் குறையும் என்ற ஒரே காரணத்திற்காக விசுவாசமாக இருக்கும் ...


S.Martin Manoj
மார் 21, 2025 13:04

கடந்த 10 ஆண்டுகளாக கட்டிமுடிக்கபடாத மதுரை எய்ம்ஸ் மாதிரியா?


pmsamy
மார் 21, 2025 07:43

நீ பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதும் விளம்பரம் தானே


M R Radha
மார் 21, 2025 09:29

பாஜக அண்ணாமலையின் உழைப்பு அசாத்தியமானது. போற்றத்தக்கது. தரவுகளின் அடிப்படையில் துல்லியமாக பேசுகிறார். இவருடைய வரவு த்ரவிஷன்களை கலக்க செய்துள்ளது. இவரை நம்பி பாஜக தனித்தே நிற்க வேண்டும். தேர்தலுக்கு பிறவு எடப்பாடி கட்சியில் பிற தலைவர்கள் போர்க்கொடி தூக்குவர். ரெட்டை இலை முடக்கப்படும் சூழலும் உருவாகும். தொண்ணூறு சதவிகித அதிமுக தொண்டர்கள் அண்ணாமலையை நம்பி பாஜகவில் இணைவர். கண்டிப்பாக அண்ணாமலை அடுத்த ஆட்சியை பிடிப்பார். எடப்பாடியின் பேராசையால் ஒரு கட்சி கட்டெறும்பாக தேய்கிறது


Ray
மார் 20, 2025 23:02

மதுரையில எய்ம்ஸ்னு ஒண்ணு. செங்கல்லை காட்டி டாம் டாம் பண்ணி நமக்கு நல்ல விளம்பரம் செய்தார் ஒருத்தரு. அப்போல்லாம் நம்ம வாயில கொழுக்கட்டை சிக்கிடுத்து அவனுங்க ஒரே வருஷத்துல கிண்டில சிறப்பு ஆஸ்பிடல் மதுரைல லைப்ரரின்னு செஞ்சு காட்டிட்டானுங்களே அவுங்கதான் ருஸ்த்துமான மனுஷங்க நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமுமின்றி வஞ்சனை செய்வாராடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே. வாய்ச்சொல்லில் வீரரடி சாத்தியமான வார்த்தைகள். இதெல்லாம் தெரியாம போனமாதம் பாரதிக்கு வக்காலத்து வந்தார் ஒருத்தர்


T.sthivinayagam
மார் 20, 2025 21:52

அதை நீங்கள் சொல்வதா


ranganathan ramesh
மார் 20, 2025 21:19

உண்மையா


தமிழ் நிலன்
மார் 20, 2025 20:41

இதை எல்லாம் படித்து தெரிந்து கொண்டு மக்கள் தெளிவடைந்து விடக்கூடாது என்பதற்காக தான் தினமும் ஒரு நாடகம் திமுக நடத்தி வருகிறது. மது விற்பனை பல கோடிகள் தந்தாலும் மக்களை கையேந்தி நிலையிலேயே வைக்க உதவுவது டாஸ்மாக் தான்.


Ramesh Sargam
மார் 20, 2025 20:32

அறிவிக்கப்படும் திட்டங்கள் ஒன்றும் நிறைவேறுவதில்லை. மக்களை ஏமாற்ற இப்படி திட்டங்களை அறிவிக்கிறது திமுக.


மதிவதனன்
மார் 20, 2025 21:48

எப்படி மோடிஜி சொன்னாரே 15 லட்சம் கொடுக்கமுடியும் என்று தான் சொன்னேன் கொடுப்பேன் என்று சொல்லவில்லை என்று சொன்னாரே அப்படி புரட்டு வேலையா


Ray
மார் 21, 2025 06:27

இப்போ மதுரை எய்ம்ஸ்லதான் உயிரை காப்பாத்தினாங்க நல்லா செயல்படுதுன்னு கேள்வி


dinesh palanisamy
மார் 20, 2025 20:10

வந்துட்டான்யா இன்னைக்கு புது பஞ்சாயதோட. தினமும் ஏதாவது ஒரு பிரச்னையை கொண்டு வரலைன்னா இவனுக்கு சம்பளம் இல்லை போல.


Murugesan
மார் 20, 2025 20:45

அறிவில்லாத அறிவாலய குடிகார அடிமைகளுக்கு என்னென்ன திட்டங்களை அமுல்படுத்தி உள்ளனர். கட்டிடம் இருக்கிறதா என்று பார்க்கக்கூடிய அளவுக்கு அறிவில்லாத தத்திகள்


ஆரூர் ரங்
மார் 20, 2025 20:02

அப்பா அன்பழகனை ஞாபகப்படுத்துவது நியாயமா அப்பா?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை