உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசை விமர்சித்த கூட்டணி கட்சிக்கு... தி.மு.க., கண்டனம்: எதிரிகளின் சதிக்கு துணை போவதா?

அரசை விமர்சித்த கூட்டணி கட்சிக்கு... தி.மு.க., கண்டனம்: எதிரிகளின் சதிக்கு துணை போவதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:கூட்டணி கட்சிகளின் விமர்சனம் குறித்து, தி.மு.க., அதிருப்தி தெரிவித்துள்ளது. 'விளைவுகளை பற்றி கவலைப்படாமல் கருத்து சொல்வது தோழமைக்கு இலக்கணம் அல்ல' என, அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழில் எச்சரிக்கை கட்டுரை வெளியாகி உள்ளது.'இது தோழமைக்கு இலக்கணம் அல்ல' என்ற தலைப்பில், 'முரசொலி' நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sf16cgi1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'தமிழகத்தில் அவசர நிலை பிரகடனமா?' என்று, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு, 'தினமலர்' நாளிதழ் கொடுத்த முக்கியத்துவத்தை பார்க்கும் போதே, தி.மு.க., ஆட்சிக்கு எதிரான சதிக் கூட்டத்துக்கு, அவர் தீனி போடத்துவங்கி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

சீண்டிப்பார்ப்பதா?

'முதல்வரை இந்த மாநாட்டின் வாயிலாக கேட்கிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?' என்று கேட்டிருக்கிறார் கே.பி., அவரை பேசவிடாமல் தடுத்துள்ளனரா? இல்லையே. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டு தான் அவரே பேசுகிறார். முதல்வரை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர், ஏன் விழுப்புரம் வீதியில் நின்று இப்படி கேட்க வேண்டும்? தோழமையுடனும், மதிப்பளித்தும் செயல்படும் முதல்வரை சீண்டிப் பார்க்க வேண்டிய நெருக்கடியும் நிர்பந்தமும் அவருக்கு இருக்கலாம்.தமிழகத்தில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடக்கவில்லையா? டிசம்பர் 28ம் தேதி, 'தீக்கதிர்' நாளிதழில் இதே பாலகிருஷ்ணன் கட்டுரை எழுதியுள்ளார்.தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களை அதில் பட்டியலிட்டுஉள்ளார். 23 வகையான போராட்டங்களை நடத்தியதாக பாலகிருஷ்ணன் மார்தட்டி கொள்கிறார். பின்னர், போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் அவரே கேட்கிறார். இத்தனை போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது உண்மை என்றால், அவற்றுக்கெல்லாம் அனுமதி அளித்தது, இவர் கேள்வி கேட்கிறாரே அதே முதல்வர் தானே? அவசர நிலை இருந்தால், ஒரு போராட்டமாவது நடத்தி இருக்க முடியுமா? போராட்டமும் நடத்தி விட்டு, போராட அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல; அரசியல் அறமும் அல்ல; மனசாட்சிக்கும் அறமல்ல. தன் நெஞ்சே தன்னை சுடாதா?

துடிக்கின்றனர்

ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, 'தமிழகத்தில் மாணவியருக்குப் பாதுகாப்பே இல்லை' என்ற, 'ட்ரெண்ட்'டை உருவாக்க துடிக்கின்றனர் சிலர். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அதற்கு அவசியம் என்ன? 'தமிழகத்தில் பட்டியலின அடக்குமுறை அதிகமாக உள்ளது; ஆணவ கொலைகள் அதிகமாக நடக்கின்றன; ஈ.வெ.ரா., கொள்கைகள் திராவிட இயக்க ஆட்சிகளில் நீர்த்துப் போய்விட்டன.'போலீஸ் துறை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது...' என்று வாய்க்கு வந்ததை பாலகிருஷ்ணன் பேசினால் கிடைக்கும் முக்கியத்துவம் என்பது, அந்த பேச்சுக்கானது அல்ல. அது, தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும் வெளிச்சம் மட்டுமே. தி.மு.க., தரப்பில் வரிக்கு வரி பதிலளிப்பது இல்லை என்பதையே பலவீனமாக நினைத்து விட்டனர் போலும்! எதிரிக்கட்சியாக நடந்து கொண்டு, எடுத்தெறிந்து பேசினால் தான் கவனம் கிடைக்கும் என்று பேசும் பேச்சுகள் ஏற்படுத்தும் பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் போவது, தோழமைக்கான இலக்கணம் அல்ல. அது தோழமையை சிதைக்கும். விழுப்புரத்தில் பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை. இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

vbs manian
ஜன 06, 2025 09:41

மனசாட்சி உள்ளவர் மனக்குமுறல் திமிறி கொண்டு வெளிவருகிறது.


Matt P
ஜன 06, 2025 09:39

தோழமை முக்கியமா? மக்கள் நலம் முக்கியமா? ஸ்தாலினுக்கு மக்கள் நலத்தை விட ...முக்கியமா தேவைப்படுகிறது.


M Ramachandran
ஜன 06, 2025 09:17

6 வயது சிறுமி கூட தெருவில் தனியாக வெளியில் அனுப்ப பெற்றோர்கள் தயங்கும் நிலை. இது எதை காட்டுகிறது? தம்பட்டம் அடிப்பதில் உபயோகமில்லை. பெண்கள் பள்ளிகளில் கழிவறைக்கு கூட போக முடியாத நிலை. கல்லூரிகள் பல்கலை கழகங்கள் எங்கும் பாதுகாப்பற்ற தனமை. இது எதை காட்டுகிறது. காவல் துறையின் கையாலாகாத தனம். காரணம் கைது நடவடிக்கையை என்றால் நடவடிக்கை எடுக்க இயலாத நிலை. இது எதை காட்டுகிறது. காவல் துறை தன்னிச்சையாக இயங்குவது எதிர் கட்சி பேரணி நடந்தால் அவர்களை கைது செய்யலாம்.


M Ramachandran
ஜன 06, 2025 08:47

அப்போ டில்லி சென்று ...என்னவென்பது எங்கள் அப்பன் குதுருக்கு உள்ளே இல்லை என்று கூறுவதை எப்படி ரசிப்பது? பூனை கண்ணை மூடிக்கொண்டு எங்கும் இருள் என்று நினைப்பது போல


N.Purushothaman
ஜன 06, 2025 08:28

முட்டு ஒலி பத்திரிக்கை வழக்காம நல்ல வார்த்தைகளை எழுதுவதற்கு பயன்படுத்த மாட்டார்களே? ஆட்சி நடத்துற கோவத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை .....


Barakat Ali
ஜன 06, 2025 10:14

செந்தில் பாலாஜி விஷயத்தில் கவர்னருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் மரியாதைக்குறைவான, நகைப்புக்கிடமான வாசகங்கள் இருந்தன.. My minister என்று அதில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப் பட்டிருந்தது .... ஒரு முதல்வர் அதிகாரபூர்வமாக கவர்னருக்கு எழுதும் கடிதமே இப்படியென்றால் ...


Dharmavaan
ஜன 06, 2025 07:50

இதை செய்தியாக போட தேவையில்லை.


VENKATASUBRAMANIAN
ஜன 06, 2025 07:49

இதைத்தானே திமுக முன்பு செய்தது. அப்போது முரசொலி என்ன எழுதியது. தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி யா. இதுதான் திராவிட மாடல்.


பேசும் தமிழன்
ஜன 06, 2025 07:42

யார் சொன்னா அனுமதியே கொடுக்கப்படுவதில்லை என்று... மாநில அரசுக்கு எதிரான போராட்டம் என்றால் மட்டுமெ அனுமதி இல்லை.. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்றால்.. மறுநாளே... ஏன் அன்றே கூட அனுமதி கிடைக்கும்.. யாருக்கு அனுமதி கிடைக்கிறது ஆளுங்கட்சி மற்றும் அதன் ஆதரவு அல்லக்கை கட்சிகளுக்கு மட்டுமெ அனுமதி கிடைக்கிறது... கூட்டணியில் கூட இருக்கும் கட்சியே அனுமதி கொடுப்பதில்லை என்றும்.. தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்ற நிலமை இருப்பதாக கூறி இருப்பது.. ஆட்சியின் இலட்சணம் எந்த அளவில் உள்ளது என்பதை காட்டுகிறது.


Minimole P C
ஜன 06, 2025 07:42

Staging dramas, misleading people, looting public money etc, who gave monopoly rights only to DMK. Other parties also have the same rights equal to DMK. If alliance parties accuses the ruling party DMK, it has the duty to give clarification to the points raised by the other parties..Instead, accusing them citing alliance is showing the dynasty kings rule that what ever the king does, the have to accept it.True undiluted fascism.


Vijay
ஜன 06, 2025 07:23

எல்லாம் 50 கோடிக்காக


முக்கிய வீடியோ