உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி; நயினார் நாகேந்திரன்

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=te2gy5n7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் மூலம் நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர இண்டி கூட்டணியின் எம்பிக்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது. இந்தக் கூட்டணியின் தலைமையான காங்கிரஸ் அவசரச் சடம் மூலம் நமது நாட்டையே இருண்ட காலத்தில் தள்ளி அரசியலமைப்புச் சட்டத்தையே உருக்குலைத்துப் போட்டதை இன்றும் மக்கள் கொடுங்கனவாக எண்ணி நடுங்குகிறார்கள்.இதே கூட்டணியின் தமிழக முகமான திமுக தான் நூற்றாண்டுக் கோயில்களை இடித்தேன் என்று சொல்பவர்களை மூத்தத் தலைவர்களாகவும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் “கறுப்பர் கூட்டங்களைத்” தொண்டர்களாகவும் வைத்திருக்கிறது.ஆக, ஜனநாயக தேசத்தில் வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச திமுக அரசின் முயற்சியை நீதி முறியடித்தது அவர்களுக்குப் பேரிடி தான். அதனால் தான் இப்பொழுது அந்த நீதிக்கே வாய்ப்பூட்டு போட நினைக்கிறது இந்த மக்கள்-விரோத கும்பல். இது அவர்களது அரசியல் பிழைப்பிற்காக இந்திய நாட்டின் ஜனநாயகத் தூணாக விளங்கும் நீதித்துறையையே அசைத்துப் பார்க்க நினைக்கும் ஒரு செயலாகும். இதை தேசிய ஜனநாயக கூட்டணி முறியடிக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

bharath karpagavinayagam
டிச 09, 2025 20:38

இந்தி கூட்டணி இந்துக்களுக்கு எதிரான கூட்டணி கூட்டணியை வன்மையாக கண்டித்து இந்தி கூட்டணியை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்


V RAMASWAMY
டிச 09, 2025 18:27

இனி அந்த கூட்டணியை சண்டி கூட்டணி என்று கூட அழைக்கலாம். அவர்கள் ஊழல் செய்வது, லஞ்சம் பெறுவது, உண்மையை மறைத்து பொய் புரட்டுகளைப் பரப்புபவர்கள்.


முருகன்
டிச 09, 2025 16:40

அதை நீங்கள் மட்டுமே செய்ய வேண்டும்


Ajrjunan
டிச 09, 2025 16:21

அநீதி துறையாக மாறிவிடக்கூடாது


Venkatasubramanian krishnamurthy
டிச 09, 2025 15:11

இந்தத் தீர்மானம் ஜெயிக்கப் போவதில்லை என்று இண்டி கூட்டணிக்குத் தெரியும்.


பேசும் தமிழன்
டிச 09, 2025 18:27

அவர்களுக்கு பல்பு வாங்குவது ஒன்றும் புதிதல்ல.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை