உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகியும் பணம் கொடுத்தே ஓட்டு வாங்குது தி.மு.க., சீமான் குற்றச்சாட்டு..

ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகியும் பணம் கொடுத்தே ஓட்டு வாங்குது தி.மு.க., சீமான் குற்றச்சாட்டு..

சென்னை: ''ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகியும், பணம் கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய நிலையில் தான் தி.மு.க., உள்ளது,'' என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.அவர் அளித்த பேட்டி:தேர்தலில் விலகி இருக்கும், அ.தி.மு.க, - பா.ஜ., கூறும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்கிறேன். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காது; அதிகாரத்தால் கணக்கில்லாத பணத்தை கொட்டி கொடுப்பர் என்பது தெரியும். அதற்காக பயந்து ஒதுங்கினால், அதை சரி செய்வது யார்? சாக்கடை நாற்றம் எடுக்கிறது என, மூக்கை மூடிக்கொண்டு சென்றால், யார் இறங்கி சுத்தம் செய்வது என்ற கேள்வி உள்ளது. நாங்கள் இறங்கி துாய்மை செய்கிறோம். ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் பணம் கொடுத்து தான், ஓட்டு வாங்க வேண்டிய சூழல் உள்ளது என்றால், அதை கூறி மக்களிடம் பிரசாரம் செய்வேன்.எந்த அரசியல் தலைவரிடமும், நான் ஆதரவு கேட்பதில்லை. மண்ணின் வளம், மக்களின் நலம் இதை முன்னிறுத்தியதே, எங்கள் கோட்பாடு. மக்களின் ஆதரவை கேட்டு நிற்கிறேன். கட்சிகளின் ஆதரவு வேண்டுமென்றால், நான் ஏன் தனித்து நிற்க வேண்டும்?பிராபகரனுடன் நான் இருந்த புகைப்பட சர்ச்சை தேர்தல் களத்தில் எதிரொலிக்காது. பிரபாகரனை பற்றி பேசி பேசியே, நான் ஓட்டுக்களை பெற்று காட்டியுள்ளேன். ஈ.வெ.ரா., பேசியதை பேசிக்காட்டி, எனக்கு ஓட்டு விழாமல் தடுத்து காட்ட முடியுமா; அதில் தெரிந்து விடும் யார் வலிமையான தலைவர்கள் என்று.நாம் தமிழர் கட்சியில் இருந்து ஆட்களை எடுப்பதன் வாயிலாக, தி.மு.க., எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது தெரிகிறது. ஒரு பெரிய ஆல மரத்தில் சிறிய கிளைகளும், இலைகளும் உதிர்வதால், மரத்திற்கு வீழ்ச்சி அல்ல. ஒரு இலை உதிர்ந்தால் மற்றொரு இலை வளரும்; கிளை முறிந்தால், மற்றொரு கிளை வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

SUBRAMANIAN P
ஜன 25, 2025 10:35

ஏமாளிகள் இருக்குறவரையும் ஏமாத்துறவன் இருப்பான். திருடன் கையிலேயே சாவியை குடுக்கும் கேனைத்தனத்தை தமிழகமக்கள் 1967 லேயே ஆரம்பித்து வைத்துவிட்டார்கள்.


angbu ganesh
ஜன 25, 2025 09:57

வாங்குங்க பணத்தை வாங்குங்க அது நம்ம பணம்தான் ஆனா மனசாட்சிக்கு பயந்து வோட்டு போடுங்க ஹிந்து விரோத கட்சிக்கு தயவு செய்து போடாதீங்க ஈரோடு மக்களே


AMLA ASOKAN
ஜன 25, 2025 09:55

சீமான் தனது கட்சியை ஆலமரம் என்று கூறியது நகைச்சுவை . அது காய்த்துப் போய்கொண்டிருக்கும் பனைமரம் என்பதை அவர் உணரவில்லை . இலங்கையை சீரழித்து , லட்சக்கணக்கான தமிழர்கள் கொள்ளப்பட காரணமாக இருந்த , அரசுகளால் தடை செய்யப்பட்ட அந்நிய நாட்டு இலங்கை புலி பிரபாகரனை , இங்கு தூக்கி பிடித்துக்கொண்டு கட்சி நடத்தி , அரசுக்கு எதிராக , தமிழக இளைஞர்களை இந்திய புலிகளாக மாற்றத் துடிக்கும் இவர் கைது செய்யப்படவேண்டிய ஆபத்தான நபர் . இவருக்கு வரும் வெளிநாட்டு கருப்பு பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் .


veera
ஜன 25, 2025 14:26

பாவம் சீமான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாததால் எவளோ பெரிய பினாத்தல் கருத்து நெல்லிக்காய்....


Sundar R
ஜன 25, 2025 09:54

அறிவாலயத்தின் முன்பு, பிச்சைக்காரர்கள், தெருநாய்கள் கூட நிற்பதில்லை. அதனால் தான் நாம் தமிழர் கட்சியின் அதிருப்தியாளர்களின் கால்களைப் பிராண்டி, மூக்கணாங்கயிறு கட்டி திமுகவினர் அறிவாலயத்திற்கு அழைத்து வந்துள்ளனர். மேலும், பிச்சைக்காரர்களும், தெருநாய்களும் வராத அறிவாலயத்தின் வாசலில் திமுக போடும் எலும்புத் துண்டுகள் & ரொட்டித் துண்டுகளுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக போன்றோர் கால்கடுக்க நிற்பதைப் பார்க்கும் போது படு கேவலமாக இருக்கிறது.‌ காங்கிரஸ் இல்லாத பாரதமும், திமுக இல்லாத தமிழகமும் தான் நம்முடைய நாட்டிற்கும், நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கும் நல்லது.


S.L.Narasimman
ஜன 25, 2025 08:15

நம்ம ஆளுங்கதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால் போராட்டம் அளவுக்கு போகிறார்களே. அதுக்குதான் விடியல் அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று குவார்ட்டர், பிரியாணி பட்டிபராமரிப்பு என்று சநலதிட்டங்களை செய்கிறார்.


மா.ப.சாமி
ஜன 25, 2025 08:00

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எங்களுக்கு (மக்களுக்கு)கவலை இல்லை.வாக்குக்கு பணமும் வாழ்நாள் முழுதும் இலவசம்.இதுதான் சேவை.மக்களின் எதிர்பார்ப்பு..


Kasimani Baskaran
ஜன 25, 2025 07:57

திராவிட திட்டம் என்பது தமிழனை படிக்காத பக்கியாகவே வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்தால் தற்குரியாக இருப்பவன் தனது உரிமையை சொற்பத்தொகைக்கு விற்பான். அதை வைத்து ஆட்சியை தொடரலாம். கூடுதலாக பிம்பங்களை உருவாக்கி அதில் குளிர் காயலாம். படித்தவன் ஓட்டுப்போட மாட்டான். கேள்வி கேட்க குறைவானவர்களே வருவார்கள். டிஜிட்டல் கிரியேட்டர்கள் நான் இவர்களை கெளரவ பிச்சைக்காரர்கள் என்று அழைப்பேன் 300 ஓவாய்க்கு எளிதில் கிடைப்பதால் எப்படி உருட்டினாலும் அவர்களை வைத்து முட்டுக்கொடுகைவைத்து தப்பித்து விடலாம். எதற்கு போராடுகிறோம் என்பதே கூட தெரியாமல் போராட வாடகைக்கு தமிழன் கிடைக்கிறான் என்பது ஐம்பதாண்டு திராவிட சாதனை.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 25, 2025 10:02

என்ன ஓய் போகிற போக்கில் 100 ரூபாய் விலை ஏற்றிவிட்டீர்கள்? அதொல்லாம் முடியாது. 200 ரூபாய்தான். இஷ்டம் இருந்தால் வா. இல்லாட்டி போ.


Barakat Ali
ஜன 25, 2025 07:37

மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யலை, அதனால மக்கள் கடும் கோபத்துல இருக்காங்க ன்னு குடும்ப கட்சிக்கே தெரியும் .... அதான் ஒட்டுக்குப் பணம் .....


Duruvesan
ஜன 25, 2025 07:08

பாஸ் கட்சி ஆரம்பித்து இன்று வரை கூட்டணி தான், காசும் கூட்டணியும் இல்லைனா தீயமுக எங்கயும் ஜெயிக்காது


Kasimani Baskaran
ஜன 25, 2025 08:17

கட்சி மூன்றுபட்டுப்போய் கிடக்கிறது - உடைய வாய்ப்புகள் அதிகம். ஒன்று குடும்பம். அடுத்தது பழைய மாணவர் அணி. அடுத்தது திராவிட அனாதைகள். மூன்றும் கூட்டமும் தனித்தனியாக தீமக்காவுக்கு சங்கூத தக்க தருணம் பார்த்து காத்திருக்கிறார்கள்.


Indhuindian
ஜன 25, 2025 06:31

தப்பு கணக்கு ஆட்சிக்கு 67லே வந்ததுலேந்து காசுக்குதான் வோட்டை வாங்கறாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை