உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகராட்சி தலைவியின் வளையலை உருவ முயன்ற திமுக கவுன்சிலர்: வீடியோ வைரல்

நகராட்சி தலைவியின் வளையலை உருவ முயன்ற திமுக கவுன்சிலர்: வீடியோ வைரல்

குன்னூர்: குன்னூரில் நகராட்சி தலைவியின் வளையலை தி.மு.க., கவுன்சிலர் உருவ முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் உறுதிமொழி எடுத்து வருகின்றனர். அதேபோல், நீலகிரி மாவட்டம் குன்னூரிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது. அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி தலைவி சுசீலா, கவுன்சிலரும், அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி தலைவர் மற்றும் தலைமை பேச்சாளருமான ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cqjs7adi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உறுதிமொழி வாசித்துக் கொண்டு இருந்த போது, நகராட்சி தலைவர் சுசீலா கையில் இருந்த வளையலை, ஜாகிர் உசேன் உருவ முயன்றார். இதனை பார்த்த அருகில் இருந்த மற்றொரு நிர்வாகி, அவரின் கையை தட்டிவிட்டார். ஓரிரு வினாடிகளில், சுசிலா கை மீது மீண்டும் தனது கையை வைத்த ஜாகிர் உசேன் வளையலை கழற்ற முயன்றார். உடனடியாக சுசீலா தனது கையை கீழே இறக்கினார்.இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். உடனடியாக அந்த வீடியோ வைரலானது. இதனை பார்த்து தி.மு.க.,வை விமர்சித்து வருகின்றனர்.

அண்ணாமலை விமர்சனம்

இந்த வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் தனது 'எக்ஸ் ' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதுடன், '' ஹிந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன். திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!'' என விமர்சித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raj
மார் 05, 2025 03:49

தவறில்லை... இது தான் தகுதி விடியலில் உறுப்பினர் ஆக... தலைமையும் ஒன்றும் கேட்காது.


Visu
மார் 04, 2025 23:36

திருட்டு உருட்டு கழட்டு என்னனு கேட்கிறவங்களுக்கு இதுதான் பதில்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 04, 2025 23:26

அப்பா , பார்த்தீங்களா , ஹிந்தி தெரியாது போ அப்படிங்குறதுல ஆரம்பிச்சு வளையை உருவறது வரைக்கும் வந்திடுச்சு. இனிமேல் சேலை ....


Bhakt
மார் 04, 2025 23:17

இவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளலாமே அப்பா


தமிழன்
மார் 04, 2025 23:02

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது திருட்டு முன்னேற்ற கழக திமுக கட்சியின் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 04, 2025 21:50

2026 ஒரு வேட்பாளர், முதல் வேட்பாளர் கிடைத்துவிட்டார்


sankaranarayanan
மார் 04, 2025 21:00

ஹிந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன். திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது என்பது தெள்ளத்தெளிவாகிற்று முதல்வரே சற்று உற்று நோக்கி அவரது கட்சியின் அலங்கோலத்தை கண்டு மகிழ வேண்டும் திருட்டு திமுக என்று சொல்லமேல் செய்யும் இவரை கட்சி மேலிடம் ஒன்றுமே செய்யாது பெண்களே ஜாக்கிரதை


மாலா
மார் 04, 2025 20:34

வளயல் மட்டுமா .............. கூட வா ?


தமிழ்வேள்
மார் 04, 2025 20:19

திராவிடத்தின் தொட்டில் பழக்கம் திருட்டு புரட்டு வன்முறை கள்ள ஓட்டு கள்ள உறவு கள்ள சாராயம் பொறுக்கி தனம் ஃபிராடு முதலியன.. இந்த பழக்கம் சுடுகாட்டுக்கு இவர்கள் போகும் வரை உடல்& உயிரை விட்டு பிரிக்க முடியாது.. இந்த பழக்கம் இல்லாதவன் திராவிடத்தில் தொடர அருகதை அற்றவன் மட்டுமின்றி திராவிடத்தின் தீராக் களங்கம்...


புதிய வீடியோ