10 மாதம் அட்வான்சாக தி.மு.க., தேர்தல் பிரசாரம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு 10 மாதங்கள் இருக்கும் நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய பிரதான கட்சிகள், இப்போதே முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பிரசார பயணத்தை வரும் 7ம் தேதி துவக்குகிறார். அதற்கு முன்பாகவே, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை, கடந்த 1ம் தேதி முதல் தி.மு.க., துவங்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து வருகின்றனர்.