மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
1 hour(s) ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
2 hour(s) ago | 13
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
2 hour(s) ago
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் கலந்து கொள்ள தி.மு.க., முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவையில் தி.மு.க.,வுக்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டப்பேரவையில் ஒரே பகுதியில் இடம் ஒதுக்க வலியுறுத்தி தி.மு.க., உறுப்பினர்கள் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தி.மு.க., மக்களுக்கு துரோகம் செய்வதாக குற்றம் சாட்டியது. இந்நிலையில் தி.மு.க., சட்டப்பேரவை தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவை தலைவர் டி.ஜெயகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், ஒரே இடத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் மாற்றமில்லை. ஜனநாயக கடமையாற்ற வேண்டியுள்ளதால் பேரவை விவாதங்களில் கலந்து கொள்ள தி.மு.க., முடிவு செய்துள்ளது. அடுத்த வாரம் பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு துறைகளுக்கான ஒதுக்கீடு தொடர்பாக நடக்கும் விவாதத்தில் தி.மு.க., உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் எதிர்கட்சிகளின் சிறிய கோரிக்கைகளை கூட ஏற்காதது ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதத்தோன்றுகிறது. பார்லிமென்டில் மற்ற மாநில சட்டப்பேரவைகளில் கட்சி உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சட்டப்பேரவை தொடரில் கலந்து கொள்ள தி.மு.க., உறுப்பினர்கள் யாரும் பயப்படவில்லை. சட்டப்பேரவையில் தி.மு.க., உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவார்கள் என கூறியுள்ளார்.
1 hour(s) ago
2 hour(s) ago | 13
2 hour(s) ago