உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு தோல்வி பயம்: உறுதியாக சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!

தி.மு.க.,வுக்கு தோல்வி பயம்: உறுதியாக சொல்கிறார் நயினார் நாகேந்திரன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: தி.மு.க தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால்தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர் என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f3z66xbo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: * தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், ஓ.பி.எஸ்., உள்ளிட்டோர் இருக்கின்றனர். * ஜூன் 8ம் தேதி மதுரை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளார். * அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை, யார் அந்த சார்? என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது. * இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. தெளிவுபடுத்த வேண்டியது தமிழக முதல்வரின் பொறுப்பு. அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் வரவேண்டும். * சட்டம் ஒழுங்கு பிரச்னை மோசமாக உள்ளது. தமிழகத்தில் தான் நவீன வகையான போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறது. * தி.மு.க தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால்தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. * காங்கிரஸோ, தி.மு.க.,வை பற்றியோ கூட்டணி பற்றிய எந்த குறையும் நாங்கள் கூறவில்லை. அப்படி இருக்கையில் முதலமைச்சர் எங்களை பார்த்து பயந்து ஏன் குறை சொல்ல வேண்டும்.* அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது தமிழக அரசியல் களம் அதிரடியாக இருந்தது. அண்ணாமலைக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தே.ஜ., கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் கூட்டாட்சி தான் அமையும் என்று பல்வேறு தரப்பினர் சொல்கின்றனர் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ''தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி இல்லை. வரும் காலத்தில் அது சாத்தியமா என பார்க்கலாம். தே.ஜ., கூட்டணி ஆட்சி வரும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nallavan
ஜூன் 06, 2025 15:20

தமிழ்நாட்டில் ஆடு மாடு மேய்க்க பயிற்சி அளிக்கப்படும், இடம் கமல் ஆலயம்


K.n. Dhasarathan
ஜூன் 04, 2025 20:59

ஐயா நைனார் ட்ரைனில் பிடிபட்ட பல கோடிகள் பற்றி ஏன் வாயை திறக்கவில்லை ? அல்லது கார் ஓட்டுநர் அவ்வளவு பெரும் பணக்காரரா ? வர வர அண்ணாமலை போல பொய்களில் புரள்பரா நீங்கள் யாரையா நீங்கள் ?


beindian
ஜூன் 04, 2025 16:48

இப்படியே பேசி பேசித்தான் ஒருத்தர் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார், இவரு என்னத்தை அறுக்கப்போறாரோ ?


Abdul Rahim
ஜூன் 04, 2025 16:30

இந்த கனவு நிலைக்காது 4 கோடி விசாரணையும் நிக்காது ....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 04, 2025 16:20

தோல்விப்பயம் இல்லை ...அத்தைக்கு தோல்வி ஒன்றும் புதிதலால் ,,கூம்பில் உக்காருவதும் புதிதல்ல ... வழக்கு பயம் ..திஹார் பயம் ..அண்ணாமலை பயம் ...பழமொழி பிச்சுக்குமோன்னு பயம்,


V Venkatachalam
ஜூன் 04, 2025 15:04

அடடா அப்போ எங்கள் வசம் இருக்கும் ரூ 500 நோட்டுகள் கூட பிரயோஜனப்படாதா?


google
ஜூன் 04, 2025 14:47

dialogue a mathu,Meendum vendum Annamalai..


Saai Sundharamurthy AVK
ஜூன் 04, 2025 14:35

திமுகவுக்கு தோல்வி பயம் என்பது உண்மை தான்.


Barakat Ali
ஜூன் 04, 2025 14:31

பணத்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறது சமூக விரோத கட்சி ......


GMM
ஜூன் 04, 2025 14:04

வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அல்லது பிஜேபி அண்ணா திமுக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டி வரும். தனி மெஜாரிட்டி எந்த கட்சிக்கும் இருக்க வாய்ப்பு இல்லை? பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இருந்தால் அனைத்து கட்சிகளும் வாக்காளர் விடுபடாமல் பார்த்து கொள்ளும்.


சமீபத்திய செய்தி