உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மறு வரையறை கூடாது; மாநில சுயாட்சி, மாநிலப் பட்டியலில் கல்வி வலியுறுத்தி தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்

தொகுதி மறு வரையறை கூடாது; மாநில சுயாட்சி, மாநிலப் பட்டியலில் கல்வி வலியுறுத்தி தி.மு.க., பொதுக்குழு தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர்கள் அணி என இரண்டு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.மதுரையில் இன்று (ஜூன் 01) முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:* கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும்.* முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு* இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு* உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம் என வலியுறுத்தி தீர்மானம்.* தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் அரசுக்கு பாராட்டு* ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம் என வலியுறுத்தி தீர்மானம். * தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதல்வர் பணி தொடரத் துணை நிற்போம் என வலியுறுத்தி தீர்மானம் * ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.* தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் * தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் ஹிந்தித் திணிப்பைக் கைவிட வலியுறுத்தி தீர்மானம்.* கீழடி ஆய்வை மறுக்கும் மத்திய பா.ஜ., அரசுக்கு கண்டனம்* ரயில்வே திட்டங்களில் தமிழகத்தை புறக்கணிக்கும் பா.ஜ., அரசுக்கு கண்டனம்* சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம். * விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ., அரசுக்குக் கண்டனம் * ஜாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும், முறையாகவும் நடத்த வலியுறுத்தி தீர்மானம் * தமிழகத்தின் பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது என்ன வலியுறுத்தி தீர்மானம்.* கவர்னரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு* துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சனத்திற்கு கண்டனம்* அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ., அரசுக்குக் கண்டனம்* உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி தீர்மானம் * எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம் என வலியுறுத்தி தீர்மானம். * அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம் என்ன வலியுறுத்தி தீர்மானம். தி.மு.க., பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு உள்ளன.2 அணிகள் உருவாக்கம்தி.மு.க.,வில் மாற்றுத் திறனாளிகள் அணி புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள், பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில், புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.இரங்கல் தீர்மானம் முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், போப் பிரான்சிஸ், விஜயகாந்த், பங்காரு அடிகளார், ஆம்ஸ்ட்ராங், குமரி அனந்தன், எம்.எஸ். சுவாமி நாதன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Parthasarathy Badrinarayanan
ஜூன் 07, 2025 11:14

கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் முட்ட்ள்கள்தான் உருவாவார்கள். சமச்சீர் கல்வி போலக் கேவலம் ஏதுமில்லை. மார்க் முட்டாள்களுக்கும் அள்ளிவீசுவதால்தான் 95% பேர் பாஸாகிறார்கள். சமச்சீர் கல்வி கற்று பாஸான மாணவனால் அவனது அட்ரஸ் கூட எழுதத் தெரிவதில்லை. அதுவும் அரசு பள்ளி மாணவர்கள் அறிவு அதலபாதாளத்தில் கிடக்கறது


Parthasarathy Badrinarayanan
ஜூன் 06, 2025 12:03

வேஸ்ட்.


குழு கோர்ட்டு தீர்மானம்
ஜூன் 01, 2025 23:02

நீங்கள் என்ன வேணும்னாலும் பேசலாம். அடுத்த வருடம் இதே நேரம் நீங்கள் அண்ணா அறிவாலயத்தில் மட்டும் தான் தீர்மானம் போட முடியும்.


Rajasekar Jayaraman
ஜூன் 01, 2025 21:13

சுடலை, தலைக்கு மேல் வெள்ளம் போனால்,சான் என்ன முழம் என்ன என்று விரத்தியில் உளறித் திரிகிறது.


kalyan
ஜூன் 01, 2025 21:10

மாநில சுயாட்சி கேளுங்கள் . கிடைத்தால், கர்நாடகாவிடம் தண்ணீர் விடமட்டும் கேட்க முடியாது. IWT யை ரத்து செய்தது போல் காவேரி மேலாண் ஆணையத்தையும் மத்திய அரசு மொத்தமாக மூடி விடும். பிறகென்ன சாப்பிட தமிழ், குடிக்க தமிழ் இருக்க தமிழ் நாடு என்றாகிவிடும்


kumarkv
ஜூன் 01, 2025 18:10

லஞ்சம் ஒழிப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்


राज्
ஜூன் 01, 2025 17:59

24 வகையான சைவ அசைவ உணவுகள் பரிமாறுவதற்கு கேரளாவிலிருந்து 1500 பேர் வரவழைக்கப்பட்டனர் 10,000 பேருக்கு சாப்பாடு இவை எல்லாம் யார் வீட்டு பணம் உங்கள் சொந்த பணமா தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடித்தது


राज्
ஜூன் 01, 2025 17:57

எல்லாமே உங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். மூன்றாவது மொழி கூடாது ஆனால் துட்டு வேண்டும் தொகுதி மறு வரை கூடாது நாங்கள் கொள்ளையடிப்போம் ஆனால் மத்திய அரசு கேள்வி கேட்கக் கூடாது இப்படி எல்லாமே உங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும்.


Sundar R
ஜூன் 01, 2025 17:42

Whole Bharatiya citizens are aware that DMK is the Most Corrupted Party in India. The ₹. २००/- as litters being thrown everyday by all the DMK leaders are the currencies looted from the Tamilians, not Dravidians. Even the toilet bucket in Karunanidhis house was looted from some Tamilians resistance, not Dravidians. God should save Tamil Nadu by cremating the DMK well before 2026 Assembly Elections.


G Mahalingam
ஜூன் 01, 2025 16:42

திமுகவினர் வீட்டுக்கு வந்தால் கதவை மூடி, கதை விடுவதை தவிர்ப்பேன்.


சமீபத்திய செய்தி