உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வார்த்தை வலையில் சிக்கிய தி.மு.க., அரசு!

வார்த்தை வலையில் சிக்கிய தி.மு.க., அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது' என்பது பழமொழி. ஆனால், தானே அதை தேடிப் பிடித்து காலில் சுற்றிக் கொண்டால்? அதைப் போன்ற ஒரு விஷயத்தை, தமிழக அரசு செய்துள்ளது.பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில், கவர்னரின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், எட்டு சட்டத்திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், உச்ச நீதிமன்றம் வரை செல்ல, அந்த நீதிமன்றமும் மிக விசித்திரமான தீர்ப்பை வழங்கிய செய்தி, இரு வாரங்களாக அகில இந்திய அளவில் சர்ச்சையாகி உள்ளது.கவர்னர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அனுமதி வழங்கி, அவை சட்டமானதாக அறிவித்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, அச்சட்டங்கள் அரசிதழிலும் வெளியிடப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெற்றதாக, தி.மு.க., அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.இதுவரை மிக நுட்பமாக காய் நகர்த்திய, தி.மு.க.,வின் சட்ட வல்லுநர்கள், ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டனர்.

ஆலோசனை

தி.மு.க., அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்துக்கான ஷரத்தில், 'வேந்தர் என்ற சொல்லுக்கு பதிலாக, மாநில அரசு என்ற சொல் இடம்பெறும்' என்று உள்ளது. இங்குதான் சிக்கல் எழுகிறது.கவர்னர்தான் வேந்தர். இனி, அவருக்கு அதிகாரமில்லை. மாநில அரசு என்பது என்ன அல்லது யார்? மந்திரி சபையா? அல்லது அதற்கு தலைமை தாங்கும் முதல்வரா? அரசியல் அமைப்பு அப்படி எதுவும் சொல்லவில்லை.மாறாக, மிகத்தெளிவாக பிரிவு, 154ல் அரசு நிர்வாகத்தின் அதிகாரம் கவர்னரிடம் உள்ளது. அதை அவர் நேரிடையாகவோ, தனக்கு கீழே உள்ள நிர்வாகிகள் வாயிலாகவோ பயன்படுத்தலாம். இதன் பொருள், அரசின் நிர்வாக அதிகாரம் கவர்னரிடம் இருந்தே உருவாவதால், அவரே அதன் தலைவர்.அடுத்ததாக பிரிவு, 163 கவர்னருக்கு உதவி செய்யவும், ஆலோசனை கூறவும், முதல்வரின் தலைமையில் ஒரு மந்திரி சபை இயங்கும். வானளாவிய அதிகாரம் பெற்றிருந்தாலும், முதல்வர், மந்திரி சபைக்குத்தான் தலைவரே அன்றி, அரசின் தலைவர் அல்ல.

அதிகாரம்

இறுதியாக பிரிவு, 166 மிகத் தெளிவாக, 'மாநில அரசின் அனைத்து நிர்வாக செயல்களும் கவர்னரது பெயரால் நடைபெற வேண்டும்' என்று சொல்கிறது. கவர்னரின் கையெழுத்து இல்லாமல் எந்த அரசாணையும் பிறப்பிக்க முடியாது. இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழக அரசு என்றால், சட்டப்படி அது கவர்னரை மட்டுமே குறிக்கும். எனவே, தற்போது தமிழக அரசு கொண்டு வந்து, உச்ச நீதிமன்றம் தலையிட்டு எதை செய்ய நினைத்தார்களோ, அதை அவர்களே முறியடித்துக் கொண்டனர்.காரணம் முன்னர் வேந்தர் என்ற அதிகாரத்தில், துணைவேந்தர்களை நியமித்த கவர்னர், இப்போது அரசின் தலைவர் என்ற முறையில், அதே அதிகாரத்தைப் பெறுகிறார். இதை என்னவென்று சொல்வது? நம்முடைய இந்த வாதத்திற்கு வலு சேர்க்கின்றனர் கேரள முதல்வர் பினராயி விஜயனும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும். கேரள அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில், வேந்தர் என்பதற்கு பதிலாக, மந்திரி சபை என்று மாற்றியுள்ளனர்.மேற்கு வங்கம் கொண்டு வந்த திருத்தத்தில், முதல்வர் என்றே குறிப்பிட்டுள்ளனர். எனவே, மாநில அரசு என்ற சொல் கவர்னரையே குறிக்கும் என்பதை அறிந்தே, அவர்கள் இப்படி செயல்பட்டுள்ளனர். கோட்டை விட்டது தி.மு.க., அரசுதான்.- பிரபாகரன்எழுத்தாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

sankaranarayanan
ஏப் 26, 2025 08:05

இந்த கூத்துக்கு விரைவில் சென்னையில் ஒரு விருந்தாம் அதில் கபில் சிபில், அபேசேக் சிங்வி, வில்சன் இன்னும் பல மேதாவிகள் கலந்து கொண்டு குட்டையை குழப்பியதற்காகவும் இன்னும் குழப்புவதற்காகவும் கொடுப்படும் பெரிய மாபெரும் விருந்தாம் அது எல்லாமே அரசு பனந்தானே வீணாக போக்கியது மக்களே பார்த்துக்கொள்ளுங்கள்


Yasararafath
ஏப் 25, 2025 18:31

இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறது.


Ravi Kulasekaran
ஏப் 25, 2025 17:02

திமுகவில் குறைந்த பட்ச கல்வி தகுதி+2 பின்னர் எப்படி இருக்கும் அவர்களின் சட்ட வல்லுநர்கள் அவர்கள் எப்படிப்பட்ட சட்டக்கல்லூரியில் படிக்க வில்லை அடிதடி கலாட்டா கலாச்சாரம்.


thehindu
ஏப் 25, 2025 16:22

அவமானம் தாங்கிக்கொள்ளமுடியாமல் இப்படி ஏதாவது கற்பனைகதைகளை இட்டுக்கட்டி கூறி மக்களை திசைதிருப்புகிறார்கள்


SUBRAMANIAN P
ஏப் 25, 2025 13:29

இதுக்கு பேருதான் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வது.


Saran
ஏப் 25, 2025 13:26

people don’t vote for money and quarter. Every body is suffering due to low class people who vote every time for money.


Rengaraj
ஏப் 25, 2025 13:02

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவருக்குத்தான் எல்லா அதிகாரமும் என்று அரசியல் சட்டம் சொல்லுமேயானால், ஒரு சந்தேகத்துக்கு விடை கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது. தெளிவான மனநிலையில் இல்லாத ஒருவர், அல்லது புத்திஸ்வாதீனமற்றவர் கூறும் எந்த ஒரு கூற்றையும் சட்டம் ஏற்றுக்கொள்ளாது. ஒரு பத்திரத்திலோ, அக்ரீமெண்ட்டிலோ, அபிடவிட்டிலோ, குடித்து விட்டு தெளிவற்ற மனநிலையில் கையெழுத்து போட்டார் என்பது ஊர்ஜிதமானால் அது சரியான ஆவணம் என்று எடுத்துக் கொள்ளப்படாது. புத்திசுவாதீனமற்றவர்களை எப்படி நடத்த வேண்டுமோ அப்படிதான் குடிகாரர்களை நடத்தவேண்டும். நீதிமன்றத்தில் அவர்கள் சாட்சியம் செல்லாது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒரு குடிகாரரர் போடும் ஓட்டும் அந்த ரகம்தானே அது செல்லுமா? தங்களை யார் ஆட்சிசெய்ய வேண்டும் என்று நடக்கும் ஒரு ஜனநாயக தேர்தல்முறையில் ஒரு தொகுதியில் பெரும்பாலானவர்கள் குடிகாரர்களாக இருந்து குடித்துவிட்டு வோட்டுப் போட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தால், அந்த தொகுதி எம்.எல்.ஏ நியாயமான முறையில் தேர்தெடுக்கப் பட்டிக்கிறார் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அறுதியிட்டு கூற இயலுமா ? தேர்தல் முறையில் போடப்படும் ஒவ்வொரு ஓட்டும் விலைமதிப்பில்லாதது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் வோட்டுக்கு பணம் கொடுப்பதை தவறு என்று மட்டும் சொல்லி விட்டு , வோட்டுக்கு பணம் கொடுத்து ஒரு எம். எல். ஏ தேர்ந்தேடுக்கப்படுவதை தகுதி இழப்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஏதும் சொல்வதில்லை. உச்ச நீதிமன்றமும் தேர்தல் கமிஷனும் இது குறித்து மத்திய அரசை வலியுறுத்தி சட்டவிதிகளை இயற்றுமாறு சொல்வதில்லை. மத்திய மாநில அரசுகளும் இது குறித்து வழக்குகள் போடுவதில்லை. மாநில அரசுகள் இதுகுறித்து ஒரு விசாரணை கமிஷன் கூட அமைப்பதில்லை. சட்டத்துக்கும், நீதிக்கும், தர்மத்துக்கும் புறம்பாக எந்தவித சந்தேகமும் இல்லாமல் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார் என்று உறுதியாக கூற இயலாத நிலையில் இப்படியெல்லாம் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள ஒரு மந்திரி சபை செய்வதெல்லாம் அரசியல் சாசனப்படி சரி என்று அரசியல் சாசனம் சொல்கிறதா? உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுதான் இதற்கு விடை சொல்லவேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
ஏப் 25, 2025 17:15

புத்தி சுவாதீனம் இல்லாதவர் தேர்தலிலேயே போட்டியிட முடியாது ..... ஒருகால் போட்டியிட்டு வென்று பதவியேற்றாலும் அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று அரசு நிர்ணயித்த வழிமுறைகளின்படி நிரூபிக்கப்பட்டால், அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியிழப்பார்


N Annamalai
ஏப் 25, 2025 12:54

அறிவாளிகளின் குழுவை முதல்வர் மாற்ற வேண்டும் .திரும்ப திரும்ப அடி வாங்க முடியவில்லை


TCT
ஏப் 25, 2025 12:53

This is a small mistake by Tamilnadu but going to cost more money to change the wording. Big collection awaiting for the Supreme Court Judges while changing the above verdict to suit DMK party. I suggest DMK should offer more money and change that Vice Chancellors in Tamilnadu University should be appointed by the DMK Party Leader only instead of Tamilnadu Ministry. It is question of money only. Pay more & Get more - Supreme Court of India.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 25, 2025 11:32

அறிவாலய அறிவாளிகள் .....


R.MURALIKRISHNAN
ஏப் 25, 2025 12:56

இல்லை, அறிவாலய கோமாளிகள்


சமீபத்திய செய்தி