உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலக்குகளை திமுக அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை: ராமதாஸ்

இலக்குகளை திமுக அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை: ராமதாஸ்

சென்னை: 'தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த இலக்குகளை தி.மு.க., அரசால் எட்டிப்பிடிக்க முடியவில்லை' என்று பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.அவரது அறிக்கை:தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள 2024-25ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் எதுவும் இல்லை. எடுத்துக்காட்டாக 2023-24ம் ஆண்டில் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு (ஜி.எஸ்.டி.பி) ரூ.28,32,678.98 லட்சம் கோடியாக இருக்கும் என்று தி.மு.க., அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அதில் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக ரூ.27,22, 501.95 லட்சம் கோடி என்ற அளவையே தமிழக பொருளாதாரம் எட்டிப்பிடித்திருக்கிறது.வரும் 2030ம் ஆண்டில் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.88 லட்சம் கோடி என்ற அளவுக்கு உயர்த்தப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை பொருளாதார ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரம் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 12 விழுக்காட்டுக்கும் கூடுதலாக வளர்ச்சியடைந்தால் தான் அது சாத்தியமாகும் . உண்மையில் இந்த இலக்கை அடைய 18 விழுக்காட்டுக்கும் கூடுதலான வளர்ச்சி தேவை. ஆனால், அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு தமிழகத்தின் பொருளாதாரம் ஆண்டுக்கு 8 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடையும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.மக்களுக்கு புரியும் மொழியில் சொல்வதென்றால், 2021-22ம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ரூ. 20 லட்சம் கோடியாக இருந்தது. 2023-24ம் ஆண்டில் அது 27.22 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இரு ஆண்டுகளில் ரூ.6.50 லட்சம் கோடி மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் இன்னும் 50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்துவது சாத்தியமற்றது.இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சிட்டுக்குருவி
மார் 14, 2025 06:55

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.அந்த இலக்கை அடையும் அசுர வேகத்தில் தான் உழைத்துகொண்டிருக்கின்றோம்,எங்கள் சொந்த பணகுவியலை.


Kasimani Baskaran
மார் 14, 2025 03:59

ஜப்பான், ஐரோப்பா, அமேரிக்காவை மிஞ்சும் பொருளாதாரம் என்று மார் தட்டுகிறார்கள்... இவர் என்னடா என்றால் மோசம் என்கிறார்..


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 13, 2025 23:25

டாஸ்மாக் இலக்குகளை மறந்துவிட்டுப் பேசுகிறார் .....


nisar ahmad
மார் 13, 2025 23:20

தங்களை போல தமிழகத்தி பலபச்சோந்திகள் இருப்பதால்தான் முடிவதில் தாமதமாகிறது.


Anu Sekhar
மார் 13, 2025 22:58

ஐய்யயோ நமக்கு வர கட்டிங்க சேர்க்கம்மா விட்டுட்டோமே


Appa V
மார் 13, 2025 21:49

கோட்டையை பிடிக்கிறது தான் திமுகவுக்கு இலக்கு ...இவர் மாங்கொட்டையை தான் பிடிச்சிக்கிட்டிருக்கார்


Arunkumar,Ramnad
மார் 13, 2025 21:15

இதே திமுக உனக்கு சட்டமன்ற தேர்தலில் சீட்டு அதிகம் கொடுத்தால் அப்படியே பிளேட்டை மாற்றி போட்டு ஓடி விடுவாய் உனக்கு எல்லாம் ஒரு கட்சி அதுக்கு நீ தலைவன் ..


Premanathan Sambandam
மார் 13, 2025 21:03

நீங்களும் உங்கள் இலக்கான மகனை தமிழ்நாட்டின் முதலமைச்சராகுக்கும் இலக்கை எட்டி பிடிக்க முடிய வில்லை அதற்கு என்ன செய்ய?


சந்திரசேகரன்,துறையூர்
மார் 13, 2025 20:59

இந்த மேங்கோ பாய்ஸ், அதுவும் இந்த ராமதாஸ்கு யார் சீட்டு அதிகம் கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கம் ஓடி விடுவார்கள்.


முக்கிய வீடியோ