உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எஸ்.ஐ.ஆர்., பணியை முடக்க தி.மு.க., அரசு திட்டம்: இபிஎஸ்

 எஸ்.ஐ.ஆர்., பணியை முடக்க தி.மு.க., அரசு திட்டம்: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓமலுார்: ''எஸ்.ஐ.ஆர்., பணி சுணக்கமாக இருப்பதற்கு தி.மு.க., அரசின் தலையீடே காரணம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். சேலம் விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்த வாக்காளர் பெயர்கள் உள்ளன. கடந்த 21 ஆண்டாக, எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ளாததால், ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், தவறாக இடம் பெற்றுள்ளனர். சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில், எஸ்.ஐ.ஆர்., பணி, சுணக்கமாக உள்ளது. இதற்கு, தி.மு.க., அரசின் தலையீடே காரணம். சென்னையில், 4ம் வகுப்பு படித்தவர்கள், பி.எல்.ஓ., பணியை மேற்கொள்கின்றனர். இது குறித்து தெரிவித்தும், அவர்கள் மாற்றப்படவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு, எஸ்.ஐ.ஆர்., பணி நடக்கக்கூடாது என செயல்படுகின்றனர். இதற்காக, தி.மு.க., அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகுதியான, பி.எல்.ஓ., நியமிக்காததால், குழப்பம் ஏற்படுகிறது. இடைப்பாடி தொகுதியில் மட்டும், இறந்த 5,600 பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளது. சென்னையில் பல தொகுதிகளில், பல ஆயிரம் போலி வாக்காளர்கள் இருந்ததால், நீதிமன்றம் சென்றோம். கரூரில், 10,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். எஸ்.ஐ.ஆர்., பணி முடிந்தால் உண்மையான வாக்காளர்கள் மட்டும் பட்டியலில் இடம் பெறுவர். தி.மு.க., கள்ள ஓட்டு போட முடியாது. அதனால் தான், எஸ்.ஐ.ஆர்., பணியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என நினைக்கின்றனர். எஸ்.ஐ.ஆர்., வாயிலாக எப்படி சதி செய்ய முடியும்? உண்மையான வாக்காளர்கள் மட்டுமே ஓட்டுப்போட முடியும். நானுாறு கோடி ரூபாய் மின்மாற்றி தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி பேச முடியாது. மின் துறையில், 30,000 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் மீட்டர் வைப்பதில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது; நீதிமன்றம் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். கர்நாடகாவில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'வில்லா' வீடு கட்டுவது குறித்து கேட்டபோது, 'அது குறித்த முழு விபரம் தெரியாது' என்றார். == புல் அவுட் == முறைகேடுகளை அ.தி.மு.க.,வினர் தடுக்க வேண்டும் போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை ஓட்டுகள் போன்றவற்றை சரி பார்த்து, உண்மையான வாக்காளர்கள் ஓட்டளிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான், அ.தி.மு.க.,வின் கோரிக்கை. உண்மையான வாக்காளர்கள் மட்டுமே, ஓட்டளிக்க முடியும் என்ற நிலை வந்தால், தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவதுாறு பரப்புகிறார். அ.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் ஒவ்வொருவரும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முறையாக, எஸ்.ஐ.ஆர்., பணிகளை செய்கின்றனரா என கண்காணிக்க வேண்டும். தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டால், உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். தி.மு.க.,வினர், தேர்தல் நேரத்தில் எப்படி உள்ளடி வேலை செய்வரோ, அதுபோல் எஸ்.ஐ.ஆர்., பணிகளிலும் ஓட்டுச் சாவடி அலுவலர்களுடன் இணைந்து, முறைகேடு செய்வதாக செய்திகள் வருகின்றன. இதை விழிப்புடன் செயல்பட்டு, முறியடிக்க வேண்டும். அ.தி.மு.க., ஓட்டுச் சாவடி முகவர்கள், இப்பணிகளை முறையாக செய்கின்றனரா என்பதை, மாவட்ட செயலர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும், கண்காணிக்க வேண்டும். பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

மணிமுருகன்
நவ 15, 2025 23:45

அதிமுக மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் ்தில் ஈடுபட வேண்டும் அவரவர் தொகுதி வாக்காளர்கள் பெயர்கள் அறியவேண்டும் இல்லாதவர்கள் பெயர்கள் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த செயல் சரியாக நடக்கிறதா எளன்றும் அறொய வேண்டும் தலைவர் ரஜினி காந்த் அவர்களுக்கு தலைவா ஒரு பக்கம் போராட்டம் நடத்த விட மாட்டோம் என்று ஒப்பாரி மறுபக்கம் நிர்வாகிகள் ஈடுபாடு என்று செய்தி அதனால் தலைவர் சொந்தங்கள் இதனை கவனிக்க வேண்டும்


bharathi
நவ 15, 2025 14:23

DMK fear SIR


karthik
நவ 15, 2025 11:15

என்னதான் செய்கிறார்கள் உங்க கட்சி BLA க்கள்??? திமுக கும்பல் களத்திற்கு சென்று அரசு ஊழியர்களை கையில் போட்டுக்கொண்டு இல்லாத ஓட்டுக்களை இருப்பது போல் உறுதி செய்கிறார்கள்... திமுகவிற்கு வராது என்று தெரிந்த ஓட்டுக்களை கண்டுபுடிக்கமுடியவில்லை ஆள் இல்லை என்று கூறி நீக்குகிறார்கள்.


S.L.Narasimman
நவ 15, 2025 07:38

கள்ள ஓட்டு போடுவது தீமுகாவின் ரத்தத்தில் ஊறியது.


GMM
நவ 15, 2025 07:03

EPS தெளிவான அறிக்கை. திமுக தலையீடு நிச்சயம் இருக்கும். கடந்த தேர்தல் முதல் இன்று வரை பலர் இறந்து, இடம் மாறி இருப்பர். வாக்காளர் பட்டியலை படிவம் மூலம் அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு ஏன் தலை சுற்றுகிறது. ? எடப்பாடி முதல்வர் பதவி மோகம் இல்லாமல், கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். பீகார் இளம் நண்பர் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில் நாட்டை துண்டாக்கிய நேரு காங்கிரஸ் கட்சி மீது கடும் கோபத்தில் உள்ளது தெரிய வருகிறது. அது தான் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கிற்கு காரணம்?


Kasimani Baskaran
நவ 15, 2025 06:38

கோவிட் காலக்கட்டத்தில் இறந்தவர்களுக்கு கூட வாக்களிக்க வேண்டும் என்று தீம்க்கா அடம்பிடித்து அக்கிரமம். கனியக்கா சொன்னது போல ஆண்டுக்கு 40,000 குடும்பத்தலைவர்களை காவு கொடுத்துதான் 40,000 கோடி டாஸ்மாக் வருமானமீட்டுகிறது - அதாவது மக்கள் தொகை பெருக்கத்தில் இது ஒரு கணிசமான தொகை. அதாவது ஐந்தாண்டுகளில் இரண்டு லட்சம் ஓட்டுக்கள் நீக்கப்பட்டு இருக்கவேண்டும். கனிமொழி சொன்னதை 50% பொய் என்று சொன்னாலும் கூட குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களாவது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கவேண்டும். கொளத்தூரில் கூட பல்லாயிரம் போலி வாக்காளர்கள் இருக்கிறார்களாம்.


Palanisamy T
நவ 15, 2025 04:06

உங்களுக்கு பேசுவதற்கு வேறுநல்ல விஷயங்களே இல்லையா? உறங்கும் போது உண்ணும் போது உட்காரும் போது அவர்களின் நினைவிலேயே செத்தும் சாகாமல் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பது போல் தெரிகின்றது. நீங்கள் அவர்களை ஒழிக என்கிறீர்கள். அவர்களும் திருப்பி இதே வசையைத்தான் இன்னும் உங்களிடம் பாடிக் கொண்டு இருக்கின்றார்கள். இதே மக்களும் உங்களுக்கு நிறைய வாய்ப்புக்களைக் கொடுத்தார்களே, என்ன செய்தீர்கள், மறந்துவிட்டிர்கள் போல் தெரிகின்றது. தமிழக மக்களின் தலையெழுத்து, அவர்கள் உங்கள் இருவரிடமும் சிக்கி இப்படியா இருக்கவேண்டும்


பேசும் தமிழன்
நவ 15, 2025 03:42

அவர்கள் கள்ள ஓட்டு மூலம் வெற்றி பெறலாம் என்று எண்ணி இருப்பார்கள்.... அதற்க்கு ஆபத்து வந்தால்.... எதிர்ப்பு தெரிவிக்கத் தானே செய்வார்கள் ?


MARUTHU PANDIAR
நவ 15, 2025 03:02

இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றால் முழுவதும் மத்திய அரசு / அரசுத் துறை ஊழியர்கள், தமிழ் படிக்கத் தெரிந்த டிபென்ஸ் ஊழியர்களை உடனடியாக தமிழக தேர்தல் ஆணையத்துக்கு இந்தப் பணி முடியும் வரை சுழற்சி முறையில் அனுப்பி இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இதிலும் மிகப் பெரிய முறைகேடு/மோசடி தான் நடக்கும்.நியாயமாக நடக்காது. உண்மை நோக்கம் நிறைவேற வாய்ப்பில்லை என்று பேசத் தொடங்கி விட்டார்கள் மக்கள்.


MARUTHU PANDIAR
நவ 15, 2025 02:52

டீம்கா காலத்தில் பணியமர்த்தப்பட்ட மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டால் இவர்களுக்கு சாதகமாகத் தான் செயல் படுவார்கள் என்கிறார்கள் பொது மக்கள். தீவீர வாக்காளர் சீர்திருத்தப்பணியை எப்படி எல்லாம் நீர்த்துப் போகச்செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய நிச்சயம் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். அப்போது தான் பழைய படியே அவர்கள் விரும்பிய படியே எல்லா போலி வாக்காளர்களும் இடம் பெற வைப்பது தான் நோக்கமாம்.


சமீபத்திய செய்தி