உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

திருச்சி: '' தமிழகத்தில் குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5tury0e7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அலட்சியமே காரணம்மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் மது பழக்க வழக்கம் தான். தமிழக அரசு குற்ற சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை. குற்றங்கள் அதிகரிப்பதற்கு அரசின் அலட்சியமே காரணம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது பா.ஜ.,வின் கொள்கை ஆகும். பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக சென்னையில் நடந்த பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.1 வருடம் இருக்குதுதிருச்சியில் இன்று நடைபெறும். பேரணியில், கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பா.ஜ., கொடி எங்கேயும் கட்ட மாட்டோம். தேசியக் கொடியேந்தி ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் பேரணி நடைபெறும். தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேசுவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார். நயினார் 'நச்' பதில்!நிருபர்: தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சியில் ஏதும் தேசிய பொறுப்பு கொடுக்க வாய்ப்புள்ளதா?நயினார் நாகேந்திரன் பதில்: அது கொடுப்பாங்க, உடனே ஏதும் கொடுக்காவிட்டாலும்,ஏதாவது பதவி கொடுப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V Venkatachalam
மே 15, 2025 20:35

நாங்க பொறுப்பு துறப்பு ன்னு ஒன்னு இருக்கு. அதை நாங்க எப்பவோ ஏற்றுக்கொண்டு விட்டோம். பின்னர் எப்படி பொறுப்பேற்க முடியும்? எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது. கடந்த அலங்கோல ஆட்சியில் சொல்லியிருக்க வேண்டியதை இப்போது சொல்கிறார். மக்களே இவர் சொல்வதை கேட்டு சிரிப்பார்கள்.


மோகனசுந்தரம்
மே 15, 2025 15:58

அருமையான நச் பதில். பாராட்ட வார்த்தைகளே இல்லை.


திருட்டு திராவிடன்
மே 15, 2025 15:56

ஆனால் நாங்கள் கூடி குலாவுவோம். ஏனெனில் நாங்கள் திராவிட பரம்பரையில் இருந்து வந்தவர்கள்.


Narayanan
மே 15, 2025 15:18

உலகமே இந்த திராவிடமாடல் அரசை போற்றி புகழ்ந்து வருகிறதாம் . எந்த கொம்பனும் இந்த அரசை குறைசொல்லமுடியாத அளவுக்கு நடக்கிறதாம் . நீங்கள் குற்றங்கள் அதிகரிப்பதாக செய்வது என்ன நியாயம் ? ஜனாதிபதி உச்சநீதிமன்றத்தை கேள்வி கேட்கக்கூடாது என்றும் சொல்லும் திறன் மிக்க ஸ்டாலினின் அருமையான ஆட்சி மீது பழி சொல்லாதீர்கள் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது மட்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இருந்திருந்தால் அன்றே தூக்கி இருந்திருப்பார்கள் . இப்படி சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். உங்களுக்கு பிஜேபிக்கு தெகிரியம் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை