உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊடக சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

ஊடக சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினமலர் நாளிதழ் மீது போலீசார் வழக்கு தொடர்ந்ததைக் கண்டித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது' எனத் தெரிவித்தார்.அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை, நேரடி ஒளிபரப்பு செய்ய, திமுக அரசு தடை செய்து உத்தரவிட்டதாக, நமது தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை எதிர்த்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், மதுரை மேலமாசி வீதி மதனகோபால் சுவாமி கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரில் தினமலர் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hhpvnm3l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை, தமிழகக் கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய, திமுக அரசு தடை செய்து வாய்மொழியாக உத்தரவிட்டதை, தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. இதனை அடுத்து, தினமலர் நாளிதழ் ஆசிரியர் மீது, மதுரை போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. அறநிலையத் துறை அதிகாரிகள் இந்தத் தடை குறித்து தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள், கோவில்களுக்கு வந்த பக்தர்களைத் தடுத்த செய்திகள் என பல ஆதாரங்கள் உள்ள நிலையிலும், திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்வது ஊடகங்களின் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று திமுக எதிர்பார்ப்பது வேடிக்கை.அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசு, பொதுமக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஊடகச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசின் இது போன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

g.s,rajan
ஜன 26, 2024 09:43

இந்தியாவில் நடப்பது ஜனநாயகமா இல்லை சர்வாதிகாரமா ....???


g.s,rajan
ஜன 26, 2024 08:46

அப்ப நீங்க ஆதரவா செயல்படுவதா ரொம்ப நினைப்போ...???


g.s,rajan
ஜன 26, 2024 07:50

இந்தியாவில் பிரஸ் மீட் என்று ஒன்று இதுவரை நடத்தப்படவில்லை ,பத்திரிகையாளர்களுக்கும் நிருபர்களுக்கும் நமது நாட்டில் அவ்வளவு சுதந்திரம்....


NicoleThomson
ஜன 26, 2024 04:13

சர்வாதிகாரி இடி அமீன் தான் நினைவுக்கு வருகிறார்


முருகன்
ஜன 25, 2024 21:33

உங்கள் அளவுக்கு சுதந்திரம் கெடுக்க முடியுமா


வெகுளி
ஜன 25, 2024 16:00

சில்லறை செயல்பாடுகளை பொதுவெளியில் அம்பலப்படுத்தினால் அசிங்கப்பட்டவர்கள் எரிச்சல் அடைவார்கள் .... தாத்தா காலத்திலிருந்தே தினமலர் சந்திக்காத அடக்குமுறைகளா?.... அண்ணாமலை போன்ற சனாதனிகள் வாழுமிடத்தில் தர்மம் நிச்சயம் வெல்லும்...


விடியல்
ஜன 25, 2024 15:26

95சதவீதம் ஊடகங்கள் செய்தி நிறுவனங்கள் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமைகளாக விலைபோன வர்கள் தான். அப்படி இருக்கும் போது ஓரீருவர் இவர்களுக்கு எதிராக செய்திகள் போட்டால் இப்படி தான் கொலை முயற்சி.மதுரை தினகரன் ஆபீஸ் எரித்து அஞ்சா நெஞ்சம் மறந்துவிட்டது தமிழ் நாட்டு மக்கள்


PR Makudeswaran
ஜன 25, 2024 15:12

திரு. திகழ் யாரை எங்கே வைப்பது இறைவனுக்கு தெரியும் என்று நம்புகிறோம் நினைக்கிரோம். விரும்புகிறோம். வைப்பான்.


Duruvesan
ஜன 25, 2024 15:00

விடியலுக்கு விடியல் வரும் நாள் தொலைவில் இல்லை


குமரி குருவி
ஜன 25, 2024 14:53

உண்மையை பேசுபவர்களை தி.மு.க.வுக்கு பிடிக்காது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை